நங்கநல்லூர் கோயில் தீர்த்தவாரி உற்சவத்தில் குளத்தில் மூழ்கி 5 அர்ச்சகர்கள் பலி.. நடந்தது என்ன...?
சென்னை நங்கநல்லூர் கோயிலில் சாமியை குளிப்பாட்டும் போது குளத்தில் மூழ்கி 5 அர்ச்சகர்கள் உயிரிழந்தனர்.
சென்னை
சென்னையில் தாம்பரம் அருகே உள்ள தர்மலிங்கேஸ்வரர் கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு, தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். அதன் படி பங்குனி உத்திர திருவிழா தீர்த்தவாரி நிகழ்ச்சி இன்று (ஏப்ரல் 05) முவசரன்பேட்டை குளத்தில் நடைபெற்றது.
இந்த குளத்தில் கோயில் தீர்த்தவாரியின் போது சுவாமி சிலையையும் சில அர்ச்சனை பொருட்களையும் நீரில் மூழ்கி எடுக்க அர்ச்சகர்கள் 25 பேர் குளத்தில் இறங்கினர். அப்போது அவர்கள் 2 முறை சுவாமி சிலையையும் அர்ச்சனை பொருட்களையும் மூழ்க வைத்து அவர்களும் மூழ்கினர்.
அதில் 3 ஆவது முறை அவர்கள் மூழ்கும் போது ஒரு அர்ச்சகரின் கால்கள் சேற்றில் சிக்கி அவர் தத்தளித்தார். இதை கண்ட மற்ற அர்ச்சகர்கள் பதறியடித்தபடி அவரை காப்பாற்ற முயன்றனர். இதில் அந்த அர்ச்சகர்களும் நீரில் தத்தளித்தபடியே மூழ்கினர்.
சம்பவ இடத்திற்கு தீயணைப்பு துறையினர் வரழைக்கப்பட்டனர். அவர்கள் படகு மூலம் தேடியதில் முதலில் 4 அர்ச்சகர்களின் உடல்களை மீட்டெடுத்து உள்ளனர்.
அப்போது எதிர்பாராதவிதமாக ராகவன்(18) சூர்யா (22) பானேஷ் (22) யோகிஸ்வரேன் (21) ஆகியோரின் உடல்கள் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதையடுத்து 5ஆவதாக ஒருவரின் உடலும் கிடைத்தது. இதையடுத்து அவரது உடலும் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. தீர்த்தவாரி கோயில் நிகழ்ச்சியின் போது 5 அர்ச்சகர்கள் உயிரிழந்த விவகாரம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.