தேசிய அளவிலான திறன் பயிற்சிக்கு தூத்துக்குடி கல்லூரி மாணவர்கள் 5 பேர் தேர்வு


தேசிய அளவிலான திறன் பயிற்சிக்கு தூத்துக்குடி கல்லூரி மாணவர்கள் 5 பேர் தேர்வு
x

தேசிய அளவிலான திறன் பயிற்சிக்கு தூத்துக்குடி கல்லூரி மாணவர்கள் 5 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடி

இந்திய அறிவியல் அமைப்பு ஊதியத்துடன் கூடிய தேசிய அளவிலான திறன் பயிற்சிக்கான ஆய்வு அறிக்கைகளை வரவேற்றது. இதில் இந்தியா முழுவதும் இருந்து சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கல்லூரிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான ஆராய்ச்சி பகுப்பாய்வு அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டன. அதன்படி தூத்துக்குடி வாகைக்குளம் மதர் தெரசா பொறியியல் கல்லூரியில் படிக்கும் 5 மாணவர்களும் ஆய்வு அறிக்கை சமர்ப்பித்தனர். இந்த மாணவர்களின் ஆய்வு அறிக்கை தேர்வு செய்யப்பட்டு ஊதியத்துடன் கூடிய தேசிய அளவிலான திறன் பயிற்சிக்கு மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இதன் மூலம் 5 மாணவர்களுக்கும் ஆராய்ச்சிக்காக தலா ரூ.25 ஆயிரம் வீதம் வழங்கப்பட்டது.

இந்த மாணவர்களை ஸ்காட் கல்வி குழுமத்தின் நிறுவனர் தலைவர் கிளிட்டஸ் பாபு, கல்லூரியின் திட்டமிடல் மேம்பாடு பேராசிரியர் ஜார்ஜ் கிளிங்டன் மற்றும் ஆராய்ச்சி குழுவின் பேராசிரியர்கள், அனைத்து துறை தலைவர்கள் பாராட்டினர்.


Next Story