அரசு பஸ் டிரைவருக்கு 5 ஆண்டு சிறை


அரசு பஸ் டிரைவருக்கு 5 ஆண்டு சிறை
x
திருப்பூர்

திருப்பூர்,

உடுமலையை சேர்ந்த அரசு பஸ் டிரைவர் சங்கிலியப்பன்(வயது 57). இவர் கடந்த 23-9-2021 அன்று 12 வயது சிறுமியிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டார். இதுகுறித்து உடுமலை மகளிர் போலீசார் போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து சங்கிலியப்பனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. சங்கிலியப்பனுக்கு 5 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை, ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி நாகராஜன் தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் அரசு வக்கீல் ஜமிலா பானு ஆஜராகி வாதாடினார்.


Next Story