வாலிபருக்கு 5 ஆண்டு சிறை


வாலிபருக்கு 5 ஆண்டு சிறை
x
திருப்பூர்

திருப்பூர்:

திருப்பூர் விஜயாபுரம் பகுதியை சேர்ந்தவர் சாரதி (வயது 20). இவர் கடந்த 18-7-2021 அன்று 13 வயது சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் கே.வி.ஆர்.நகர் மகளிர் போலீசார் போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து சாரதியை கைது செய்தனர். சாரதியின் சொந்த ஊர் கடலூர் மாவட்டம் சிதம்பரம் ஆகும்.

இதுகுறித்த வழக்கு விசாரணை திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. சாரதிக்கு 5 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை, ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி நாகராஜன் தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் அரசு வக்கீல் ஜமீலா பானு ஆஜராகி வாதாடினார்.

சிறப்பாக புலன் விசாரணை செய்து தண்டனை பெற்றுக்கொடுத்த மகளிர் போலீசாரை, மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.ஜி.பாபு பாராட்டினார்.


Next Story