கஞ்சாவுடன் கைதான வாலிபருக்கு 5 ஆண்டு சிறை
1 கிலோ 200 கிராம் கஞ்சாவுடன் கைதான வாலிபருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து தஞ்சை கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.
1 கிலோ 200 கிராம் கஞ்சாவுடன் கைதான வாலிபருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து தஞ்சை கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.
கஞ்சாவுடன் வாலிபர் கைது
தஞ்சை வடக்குவாசல் புண்ணியமூர்த்தி தோட்டம் சிரேஸ்சத்திரம் ரோட்டை சேர்ந்தவர் சின்னையன் (வயது24). இவர் கடந்த 2020-ம் ஆண்டு நவம்பர் மாதம் 8-ந் தேதி சட்டத்திற்கு புறம்பாக போதைப்பொருளான கஞ்சாவை வைத்து இருப்பதாக மேற்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 1 கிலோ 200 கிராம் கஞ்சாவுடன் சின்னையனை பிடித்தனர்.
பின்னர் அவர் மீது சப்-இன்ஸ்பெக்டர் சந்திரமோகன் வழக்குப்பதிவு செய்து கைது செய்தார். இதையடுத்து சின்னையன் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தொடர்ந்து மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரா புலன்விசாரணை செய்து கடந்த 2021-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 19-ந் தேதி தஞ்சை இன்றியமையா பண்டங்கள் சிறப்பு கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தார்.
1 கிலோ 200 கிராம் கஞ்சாவுடன் கைதான வாலிபருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து தஞ்சை கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.
இந்த வழக்கை நீதிபதி சுந்தர்ராஜன் விசாரணை செய்து சின்னையனுக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும், அபராதம் கட்ட தவறினால் மேலும் 1 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பு கூறினார். அரசு தரப்பில் வக்கீல் ரஞ்சித் ஆஜராகி வாதாடினார்.