வாலிபருக்கு 5 ஆண்டு சிறை


வாலிபருக்கு 5 ஆண்டு சிறை
x

வாலிபருக்கு 5 ஆண்டு சிறை

தஞ்சாவூர்

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே வெள்ளூர் கிராமத்தை சேர்ந்தவர் மாரியப்பன் மகன் கருணாநிதி (வயது38). இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ஆடுமேய்க்கும்போது 16 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தார். இது தொடர்பாக பாப்பாநாடு போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கருணாநிதியை கைது செய்தனர்.

பின்னர் அவரை தஞ்சை போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி போலீசார் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை நீதிபதி விசாரணை செய்து கருணாநிதிக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு அளித்தார். இதையடுத்து கருணாநிதி திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.


Related Tags :
Next Story