தொழிலாளியை பாட்டிலால் குத்தியவருக்கு 5 ஆண்டு சிறை
ராமநாதபுரம் அருகே தொழிலாளியை பாட்டிலால் குத்தியவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
ராமநாதபுரம்
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்டம் திருஉத்தரகோசமங்கை அருகே உள்ள கதைக்குளம் கிராமத்தை சேர்ந்தவர் பழனி (வயது 35). இவர் முன்விரோதம் காரணமாக களரி கிராமத்தைச் சேர்ந்த தொழிலாளியான ஆண்டியை (52) பாட்டிலால் குத்தி உள்ளார்.
இதில் படுகாயம் அடைந்த ஆண்டி அளித்த புகாரின் அடிப்படையில் திருஉத்தரகோசமங்கை போலீசார் வழக்கு பதிவு செய்து பழனியை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை ராமநாதபுரம் முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கவிதா மேற்கண்ட பழனிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.2ஆயிரம் அபராதமும் அதனை கட்ட தவறினால் மேலும் 3 மாதம் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பு கூறினார்.
Related Tags :
Next Story