கோவில் தர்மகர்த்தாவை வெட்டிய தொழிலாளிக்கு 5 ஆண்டு ஜெயில்


கோவில் தர்மகர்த்தாவை வெட்டிய தொழிலாளிக்கு 5 ஆண்டு ஜெயில்
x

கோவில் தர்மகர்த்தாவை வெட்டிய தொழிலாளிக்கு 5 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து சேலம் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

சேலம்

சேலம் சின்னபுதூர் மாரியம்மன் கோவில் விழா கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்றது. கோவில் விழாவில் குடிபோதையில் அந்த பகுதியை சேர்ந்த தொழிலாளர்கள் ராமு, மகுடேஸ்வரன் ஆகிய 2 பேர் பெண்களிடம் கிண்டல் செய்து உள்ளனர். இதனால் கோவில் தர்மகர்த்தா வெற்றிவேல் உள்பட சிலர் தட்டி கேட்டு உள்ளனர். இதில் அவர்களுக்குள் முன்விரோதம் ஏற்பட்டு உள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த 2 பேரும் கடந்த 2014-ம் ஆண்டு மார்ச் மாதம் 15-ந்தேதி வெற்றிவேலை அரிவாளால் வெட்டினர். இதில் அவர் காயம் அடைந்தார். இது குறித்து அவர் அஸ்தம்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர். இந்த வழக்கு 2-வது சார்பு கோர்ட்டில் நடந்து வந்தது. விசாரணை முடிவடைந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. ராமு ஏற்கனவே இறந்து விட்ட நிலையில், கோவில் தர்மகர்த்தாவை வெட்டிய மகுடேஸ்வரனுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி வேடியப்பன் தீர்ப்பு அளித்தார்.


Next Story