தெருவில் சுற்றித்திரிந்த 50 நாய்கள் பிடிபட்டன
நெல்லையில் தெருவில் சுற்றித்திரிந்த 50 நாய்கள் பிடிபட்டன
திருநெல்வேலி
நெல்லை மாநகராட்சி பகுதியில் ஏராளமான இடங்களில் தெரு நாய்கள் சுற்றித்திரிகின்றன. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்படுவதாக புகார்கள் வந்தது. இதையடுத்து மாநகராட்சி ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி உத்தரவின் பேரில் மாநகர நல அலுவலர் டாக்டர் சரோஜா அறிவுரைப்படி மாநகராட்சி பகுதி முழுவதும் நாய்களை பிடிக்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலப்பாளையம் மண்டல பகுதிகளில் நபி நகர், அம்பை ரோடு, ஆசாத் ரோடு, நேருஜி ரோடு, செல்வ விநாயகர் கோவில் தெரு, கன்னிவிநாயகர் கோவில் தெரு ஆகிய பகுதிகளில் நாய்கள் பிடிக்கும் பணி நடந்தது. சுகாதார ஆய்வாளர் நடராஜன் முன்னிலையில் மாநகராட்சி ஊழியர்கள் நாய்களை வலைவீசி பிடித்தனர். மேலப்பாளையம் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட நாய்கள் பிடிக்கப்பட்டன.
Related Tags :
Next Story