வரி செலுத்தாததால் 50 குடிநீர் இணைப்புகள் துண்டிப்பு


வரி செலுத்தாததால் 50 குடிநீர் இணைப்புகள் துண்டிப்பு
x
தினத்தந்தி 20 Jan 2023 12:15 AM IST (Updated: 20 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

நாகை நகராட்சி பகுதியில் வரி செலுத்தாததால் 50 குடிநீர் இணைப்புகளை ஆணையர் துண்டித்துள்ளார். .

நாகப்பட்டினம்

நாகை நகராட்சி பகுதியில் வரி செலுத்தாததால் 50 குடிநீர் இணைப்புகளை ஆணையர் துண்டித்துள்ளார். .

ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு

நாகை நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளன. அதில் ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். பொதுமக்களுக்கு தேவையான குடிநீர்வசதி, தெருவிளக்கு, பொது சுகாதார பணிகள் நகராட்சியால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நகராட்சி வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள வசதியாக உடனே நிலுவையில் உள்ள வரிபாக்கி தொகையை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 30-ந்தேதிக்குள் நகராட்சிக்கு செலுத்த வேண்டும்.

வரி செலுத்தாதவர்களின் குடிநீர் இணைப்புகள், பாதாள சாக்கடை இணைப்புகள் பாரபட்சம் இன்றி துண்டிக்கப்படும். மேலும் ஜப்தி மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகள் நகராட்சியால் மேற்கொள்ளப்படும் என்று நகராட்சி நிர்வாகம் அறிவித்திருந்தது. தொடர்ந்து ஒலி பெருக்கி மூலமும் அறிவிப்பு செய்யப்பட்டு வந்தது.

குடிநீர் இணைப்புகள் துண்டிப்பு

இந்த நிலையில் நேற்று முதல் கட்டமாக, குடிநீர் வரி செலுத்தாத வீடுகளில் உள்ள குடிநீர் இணைப்புகள் நகராட்சி ஆணையர் ஸ்ரீதேவி தலைமையில், பொறியாளர் ஜெயகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய குழுவினர் ஆய்வு செய்தனர்.

நாகை வெளிப்பாளையம், காளியம்மன் கோவில் தெரு, கவரை தெரு, காடம்பாடி உள்ளிட்ட நகர் பகுதிகளில் வீடு, வீடாக நடத்திய ஆய்வின்போது, நீண்ட காலமாக வரி செலுத்தாத 50-க்கும் மேற்பட்ட குடிநீர் இணைப்புகளை துண்டித்தனர். மேலும் வரிபாக்கி உள்ளவர்கள் உடனடியாக செலுத்த வேண்டும்.

உரிய நடவடிக்கை

நாகை நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி, தொழில்வரி, குடிநீர் கட்டணம், பாதாளசாக்கடை கட்டணம், கடைவாடகை மற்றும் தொழில் உரிமக்கட்டணம் ஆகியவற்றின் நிலுவை மற்றும் நடப்பு தொகையை முறையாக செலுத்த வேண்டும். இல்லையென்றால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணையர் ஸ்ரீதேவி எச்சரிக்கை விடுத்துள்ளார்.


Next Story