மத்திய அரசின் திட்டங்களை கண்காணிக்க அடுத்த 20 நாட்களில் 50 மந்திரிகள் தமிழகம் வருகை - அண்ணாமலை தகவல்


மத்திய அரசின் திட்டங்களை கண்காணிக்க அடுத்த 20 நாட்களில் 50 மந்திரிகள் தமிழகம் வருகை - அண்ணாமலை தகவல்
x

மத்திய அரசின் திட்டங்களை கண்காணிக்க அடுத்த 20 நாட்களில் 50 மந்திரிகள் தமிழகம் வரவுள்ளதாக அண்ணாமலை கூறியுள்ளார்.

சென்னை,

மத்திய அரசின் திட்டங்கள் முறையாக செயல்படுத்தப்படுகின்றனவா என்பதை கண்காணிக்க அடுத்த 20 நாட்களில் 50 மந்திரிகள் தமிழகத்திற்கு வர உள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது:- பாரதப் பிரதமர் தமிழகத்தைப் பார்த்து வரச்சொல்லி 76 மந்திரிகளை 30 நாட்களில் அனுப்பியிருக்கிறார். நேற்று வரை 19 மந்திரிகள் தமிழகத்திற்கு வந்திருக்கிறார்கள். பியூஷ் கோயல் இன்று வந்திருக்கிறார்கள்.

இன்னும் 50 மந்திரிகள் அடுத்த 20 நாட்களில் வர இருக்கிறார்கள். எப்படி மத்திய அரசின் திட்டம் கீழே வந்திருக்கிறது. லஞ்சம் இல்லாமல் கொடுக்கப்படுகிறதா? நேர்மையான முறையில் கொடுக்கப்படுகிறதா? யாருக்கு அந்த திட்டம் தேவையோ அவர்களுக்கு கொடுக்கப்படுகிறதா? என்பதை நம்முடைய மத்திய மந்திரிகள் பார்வையிட வந்திருக்கிறார்கள் என்று கூறினார்.


Next Story