முஸ்லிம்கள் 50 பேர் கைது
ஆர்ப்பாட்டம் செய்ய முயன்ற முஸ்லிம்கள் 50 பேர் கைது செய்யப்பட்டனர்.
வத்திராயிருப்பு,
ஆர்ப்பாட்டம் செய்ய முயன்ற முஸ்லிம்கள் 50 பேர் கைது செய்யப்பட்டனர்.
வீடுகளில் சோதனை
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா தமிழகம், கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இயங்கி வருகிறது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழகம் உட்பட பல்வேறு பகுதிகளில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அலுவலகம் மற்றும் அந்த அமைப்பின் நிர்வாகிகள் வீடுகளில் என்.ஐ.ஏ. சோதனை செய்யப்பட்டது.
இந்த சோதனையில் 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் மத்திய அரசு பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மற்றும் அதன் துணை அமைப்புகளை 5 ஆண்டுகளுக்கு தடை செய்வதாக அறிவித்தது.
தள்ளுமுள்ளுமுஸ்லிம்கள் 50 பேர் கைது
இந்நிலையில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா தடை செய்யப்பட்டதை கண்டித்து விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு முத்தாலம்மன் பஜாரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற ஆண்கள், பெண்கள் என 50-க்கும் மேற்பட்ட முஸ்லிம்களை, போலீசார் கைது செய்ய முயன்றனர்.
அப்போது அவர்களுக்குள் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றவர்களை குண்டு கட்டாக தூக்கி சென்று போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதேபோல ராஜபாளையத்தில் மத்திய அரசை கண்டித்து திடீரென போராட்டத்தில் ஈடுபட முயன்ற பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் 13 பேரை போலீசார் கைது செய்தனர்.