வேலூர் மாவட்டத்தில் காவிரி கூட்டுக்குடிநீர் 50 சதவீதம் வினியோகம்


வேலூர் மாவட்டத்தில் காவிரி கூட்டுக்குடிநீர் 50 சதவீதம் வினியோகம்
x

வேலூர் மாவட்டத்தில் காவிரி கூட்டுக்குடிநீர் 50 சதவீதம் வினியோகம் செய்யப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

வேலூர்

வேலூர்

வேலூர் மாவட்டத்தில் காவிரி கூட்டுக்குடிநீர் 50 சதவீதம் வினியோகம் செய்யப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்கு காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. காவிரி கூட்டுக்குடிநீர் வரும் குழாய்கள் ஆண்டுதோறும் பொதுப்பணித்துறையினாரால் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம்.

அதன்படி இந்தாண்டு மேட்டூரில் காவிரி கூட்டுக்குடிநீர் குழாய்கள் பராமரிப்பு பணிகள் கடந்த 23-ந் தேதி முதல் நடைபெற்று வருகிறது. அதன்காரணமாக வேலூர் மாவட்டத்தில் அடுத்த மாதம் (ஜூன்) 10-ந் தேதி வரை காவிரி கூட்டுக்குடிநீர் 50 சதவீதம் மட்டுமே வினியோகம் செய்யப்பட உள்ளது.

இதுகுறித்து குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கூறுகையில், வேலூர் மாவட்டத்துக்கு தினசரி 62 எம்.எல்.டி. காவிரி கூட்டுக்குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. தற்போது மேட்டூரில் நடந்து வரும் பராமரிப்பு பணிகள் காரணமாக 30 எம்.எல்.டி. குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. வருகிற 11-ந் தேதி முதல் வழக்கம்போல் தினமும் குடிநீர் வினியோகம் செய்யப்படும். அதுவரை அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளில் நீர்ஆதாரங்களை கொண்டு பொதுமக்களுக்கு தேவையான குடிநீரை வினியோகம் செய்யும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றனர்.


Related Tags :
Next Story