நாட்டுக்கோழி பண்ணை அமைக்க 50 சதவீதம் அரசு மானியம்


நாட்டுக்கோழி பண்ணை அமைக்க 50 சதவீதம் அரசு மானியம்
x

அரசு மானியத்துடன் நாட்டுக்கோழி பண்ணை அமைக்க தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

விருதுநகர்


அரசு மானியத்துடன் நாட்டுக்கோழி பண்ணை அமைக்க தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

நாட்டுக்கோழி பண்ணை

தமிழக அரசினால் கிராமப்புறங்களில் சிறிய அளவிலான நாட்டுக்கோழி பண்ணை அலகுகள் 50 சதவீத மானியத்தில் 3 முதல் 5 பயனாளிகளுக்கு 2023- 2024-ம் ஆண்டில் விருதுநகர் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட உள்ளது. திட்ட மதிப்பீட்டில் 50 சதவீதம் மானியமாக ரூ.1,50,625 தமிழக அரசு வழங்குகிறது. தகுதியுள்ள பயனாளிகள் விண்ணப்பிக்கலாம்.

ஒவ்வொரு பயனாளிக்கும் 250 எண்ணிக்கையிலான 4 வார வயதுடைய நாட்டுக்கோழி குஞ்சுகள் ஓசூர் மாவட்ட கால்நடை பண்ணையிலிருந்து இலவசமாக வழங்கப்படும். கோழி கொட்டகை சொந்த செலவில் அமைக்க குறைந்தபட்சம் 625 சதுர அடி இடம் சொந்தமாக இருக்க வேண்டும். இடத்தின் சிட்டா அடங்கல் நகல் இணைக்க வேண்டும்.

முன்னுரிமை

இந்தபகுதி மனித குடியிருப்பில் இருந்து விலகி இருக்க வேண்டும். கிராமத்தில் நிரந்தரமாக வசிப்பவராக இருக்க வேண்டும். 2022- 2023-ல் நாட்டுக்கோழி வளர்ப்பு திட்டத்தின் கீழ் பயனாளியாக இருக்கக் கூடாது. பயனாளி 3 வருடங்களுக்கு குறையாமல் பண்ணையை பராமரிக்க உறுதி அளிக்க வேண்டும்.

பயனாளியின் பங்கு தொகையை வங்கி கடனாகவோ அல்லது சொந்த முதலீடாகவோ அளிக்க வேண்டும். 50 சதவீத தொகை அளிப்பதற்கான ஆதார ஆவணங்கள் இணைக்க வேண்டும். விதவைகள், ஆதரவற்றோர், திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

விண்ணப்பம்

30 சதவீதம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்படுவர். திட்டத்தில் பயன்பெற விரும்பும் பயனாளிகள் திட்டம் தொடர்பாக தங்கள் அருகில் உள்ள கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்துவர்களை அணுகி திட்டம் தொடர்பாக மேலும் விரிவான விளக்கங்களை பெற்று கொள்ளலாம். கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்துவரிடம் விண்ணப்பத்தை பெற்று பூர்த்தி செய்து ஆதார் அட்டை நகல், நில படங்கள் நகலுடன் ஜூன் 20-க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

மேற்கண்ட தகவலை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.


Next Story