திருப்பரங்குன்றம் பகுதியில் வீடுகளில் மூலிகை தோட்டம் அமைக்க 50 சதவீத மானியம்- தோட்டக்கலை உதவி இயக்குனர் தகவல்


திருப்பரங்குன்றம் பகுதியில்  வீடுகளில் மூலிகை தோட்டம் அமைக்க 50 சதவீத மானியம்-  தோட்டக்கலை உதவி இயக்குனர் தகவல்
x

திருப்பரங்குன்றம் பகுதியில் வீடுகளில் மூலிகை தோட்டம் அமைக்க 50 சதவீத மானியம் வழங்கப்படும் என தோட்டக்கலை உதவி இயக்குனர் தெரிவித்தார்.

மதுரை

திருப்பரங்குன்றம்

திருப்பரங்குன்றம் வட்டாரத்தில் தோட்டக்கலைத்துறை மூலம் 2022-2023-ம் ஆண்டின் கீழ் மாநில தோட்டக்கலை வளர்ச்சி திட்டத்தில் வீடுகளில் மூலிகை தோட்டம் அமைப்பதற்கு 50 சதவீதம் மானிய விலையில் இடுபொருட்கள் அடங்கிய மூலிகை செடிகள் வழங்கப்பட உள்ளது. அதாவது 10 வகையான மூலிகை செடிகள் வகைக்கு 2 செடிகள் 20 எண்கள், செடி வளர்ப்பு பைகள் 10 எண்கள், வளர்ப்பு ஊடகம் 2 கிலோ, தேங்காய்நார்கட்டிகள் 10 கிலோ, மண்புழு உரம் 4 கிலோ, தொழில்நுட்பகையேடு 1 ஆகியவை அடங்கிய வீட்டு மூலிகை தோட்டதளைகள் வினியோகிக்கப்பட உள்ளது. மூலிகை தோட்ட தளைகளின் மொத்த விலை ரூ.1500. இதில் அரசு மானியம் ரூ.750. பயனாளிகளின் பங்குத்தொகை ரூ.750. எனவே தேவைப்படுவோர் ஆதார் கார்டு நகல் மற்றும் புகைப்படம் 2, ஆகிய ஆவணங்களுடன் திருப்பரங்குன்றம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலக உதவி தோட்டக்கலை அலுவலர்கள் பி.ஆறுமுகம், எஸ்.ஜெயபாலன், எம்.அர்ஜுன் ஆகியோரை தொடர்பு கொண்டு பயன்பெறுமாறு தோட்டக்கலை உதவி இயக்குனர் சி.பிரபா தெரிவித்தார்.


Next Story