500 ஏக்கர் வயல்கள் மழை நீரில் மூழ்கின


500 ஏக்கர் வயல்கள் மழை நீரில் மூழ்கின
x

500 ஏக்கர் வயல்கள் மழை நீரில் மூழ்கின

தஞ்சாவூர்

மெலட்டூர் அருகே தொடர் மழையால் 500 ஏக்கர் வயல்கள் நீரில் மூழ்கின. இதனால் நாற்றுகள் அழுகி வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

நாற்றுகள் அழுகி வீணாகும் அவலம்

மெலட்டூர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மெலட்டூர் அருகே உள்ள கரம்பை பகுதியில் கோடை பருவத்தில் நடவு மற்றும் தெளிப்பு முறையில் பயிர் செய்திருந்த 500 ஏக்கர் வயல்களில் மழைநீர் தேங்கி உள்ளது. இதனால் தண்ணீரில் மூழ்கி நாற்றுகள் அழுகி வீணாகும் நிலை உள்ளது. இந்த பகுதியில் உள்ள லிங்கன் வடிகால் வாய்க்கால் பல ஆண்டுகளாக தூர்வாராததால் மழைநீர் வெளியேற வழியின்றி விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளது என விவசாயிகள் மழைநீரில் மூழ்கியுள்ள நாற்றுகளை கையில் எடுத்து காண்பித்து வேதனையுடன் தெரிவித்தனர்.

நிவாரணம் வழங்க வேண்டும்

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:- கரம்பை பகுதியில் உள்ள லிங்கன் வாய்க்கால் பல ஆண்டுகளாக தூர்வாராததால் தற்போது பெய்த கனமழையால் கோடை நடவு வயல்களில் மழைநீர் தேங்கி நாற்றுகள் அழுகி வீணாகி வருகிறது. இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு உரிய நிவாரனம் வழங்க வேண்டும் என்றனர்.


Next Story