தமிழ்நாட்டில் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் - அமைச்சர் செந்தில் பாலாஜி


தமிழ்நாட்டில் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் - அமைச்சர் செந்தில் பாலாஜி
x
தினத்தந்தி 12 April 2023 7:39 PM IST (Updated: 12 April 2023 7:43 PM IST)
t-max-icont-min-icon

தமிழ்நாட்டில் 500 டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்படும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.

சென்னை,

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பேசியதாவது,

தமிழ்நாட்டில் 5 ஆயிரத்து 329 டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள் செயல்பட்டு வருகிறது. இதில் தகுதியான 500 டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள் கண்டறியப்பட்டு மூடப்படும். இந்த ஆண்டு 500 டாஸ்மார்க் கடைகள் மூடப்படும்.

டாஸ்மாக் கடைகளின் மேற்பார்வையாளர்களுக்கு 1 ஆயிரத்து 100 ரூபாய், விற்பனையாளர்களுக்கு 930 ரூபாய், உதவியாளர்களுக்கு 840 ரூபாய் மாதந்தோறும் கூடுதலாக ஊதியம் உயர்த்தி இம்மாதம் முதல் வழங்கப்படும்' என்றார்.


Next Story