முப்பெருந்தேவியர் கோவிலில் 508 திருவிளக்கு பூஜை


முப்பெருந்தேவியர் கோவிலில் 508 திருவிளக்கு பூஜை
x

புளியங்குடி முப்பெருந்தேவியர் கோவிலில் 508 திருவிளக்கு பூஜை நடந்தது.

தென்காசி

வாசுதேவநல்லூர்:

புளியங்குடி அரசு மருத்துவமனை அருகில் உள்ள முப்பெரும் தேவியர் பவானி அம்மன் ஆலயத்தில் உள்ள பெரிய பாளையத்து பவானியம்மன், நாககன்னியம்மன், நாகம்மன் கோவிலில் நேற்று வைகாசி மாதம் கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி இரவு 7 மணிக்கு 508 திருவிளக்கு பூைஜ நடைபெற்றது. கோவில் குருநாதர் சக்தியம்மா தலைமையில் உலக நன்மைக்காகவும், மழை வேண்டியும், கொரோனா தொற்று முற்றிலும் ஒழிய வேண்டியும் நடைபெற்ற இந்த திருவிளக்கு பூஜையில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு பாடல்கள் பாடி திருவிளக்கில் தீபமேற்றி பூஜை நடத்தினர். முன்னதாக அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு அம்மன்களுக்கு பால், மஞ்சள், தயிர், குங்குமம் உள்பட 18 வகையான அபிஷேகம் நடந்தது. பின்னர் மஞ்சள் காப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து மாலை வரை சிறப்பு அருள்வாக்கு நடைபெற்றது. இரவு அன்னதானம் வழங்கப்பட்டது.


Next Story