நெல்லையப்பர் கோவிலில் 508 திருவிளக்கு பூஜை


நெல்லையப்பர் கோவிலில் 508 திருவிளக்கு பூஜை
x

ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி நெல்லையப்பர் கோவிலில் 508 திருவிளக்கு பூஜை நடந்தது.

திருநெல்வேலி

நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி நேற்று ஆயிரங்கால் மண்டபத்தில் 508 திருவிளக்கு பூஜை நடந்தது. இதையொட்டி நேற்று மாலையில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனையும், சிறப்பு பூஜையும் நடைபெற்றது. பின்னர் 508 திருவிளக்கு பூஜை நடந்தது. அப்போது குங்கும அர்ச்சனை மற்றும் விளக்கு பூஜை பாடல்கள் பாடப்பட்டன. இந்த விளக்கு பூஜையில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.


Next Story