இந்திய வான்வெளி ஆராய்ச்சி மையத்தில் 50-ம் ஆண்டு நிறைவு விழா


இந்திய வான்வெளி ஆராய்ச்சி மையத்தில் 50-ம் ஆண்டு நிறைவு விழா
x

வாணியம்பாடி அருகே காவலூரில் உள்ள இந்திய வான்வெளி ஆராய்ச்சி மையத்தில் 40 இன்ச் தொலைநோக்கி ஆரம்பித்த 50-ம் ஆண்டு நிறைவு விழா நடந்தது.

திருப்பத்தூர்

வாணியம்பாடி அருகே காவலூரில் உள்ள இந்திய வான்வெளி ஆராய்ச்சி மையத்தில் 40 இன்ச் தொலைநோக்கி ஆரம்பித்த 50-ம் ஆண்டு நிறைவு விழா நடந்தது. இதில் விஞ்ஞானிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் கலந்து கொண்டனர்.

50-ம் ஆண்டு நிறைவு விழா.

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே ஜவ்வாது மலையில் உள்ள காவலூரில் இந்திய வான்வெளி ஆராய்ச்சி மையம் இயங்கி வருகிறது. கடந்த 1972-ம் ஆண்டு இந்திய வான்வெளி ஆராயச்சியாளர் வைனு பப்பு என்னும் வான்வெளி ஆராய்ச்சியாளரின் முயற்சியால் இந்திய அரசு சார்பில் வாணியம்பாடி அருகே காவலூர் வனப்பகுதியில் இந்திய அரசு சார்பில் வான்வெளி தொலைநோக்கு ஆராய்ச்சி மையம் அமைக்கப்பட்டது.

இங்கு ஒரு மீட்டர் விட்டமுடைய (40 இஞ்ச்) தொலை நோக்கி ஆரம்பிக்கப்பட்டு 50-ம் ஆண்டு நிறைவு விழா ஆராய்ச்சி மைய வளாகத்தில் நடைபெற்றது. இதில் வான்வெளி ஆராய்ச்சி மையத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற விஞ்ஞானிகள் மற்றும் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த வான்வெளி ஆராய்ச்சியாளர்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விஞ்ஞானிகள் கூறியதாவது:-

சாதனை

இந்த வான்வெளி ஆராய்ச்சி மையத்தில் பல்வேறு தொலைநோக்கிகள் உள்ளன. அதில் ஒரு மீட்டர் விட்டமுடைய (40 இஞ்ச்) தொலை நோக்கியின் 50-ம் ஆண்டு நிறைவு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. கொடைக்கானலில் ஒரு ஆராய்ச்சி மையம் உள்ளது. அங்கு சூரியனை பற்றி சுமார் 120 ஆண்டுகளாக ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. காவலூரில் 1964-ம் ஆண்டு முதல் வான்வெளி ஆராய்ச்சிகள் தொடங்கப்பட்டுள்ளது.

1972-ம் ஆண்டு தொலைநோக்கி ஜெர்மன் நாட்டில் இருந்து இறக்குமதி செய்து ஒரு மீட்டர் விட்டமுடைய (40 இஞ்ச்) தொலைநோக்கி முழுக்க முழுக்க இந்திய விஞ்ஞானிகளால் தயாரிக்கப்பட்ட ஒரு தொலைநோக்கி ஆகும். காவலூரில் உள்ள வைனு பப்பு வான்வெளி ஆராய்ச்சி மையம் ஆசியாவிலேயே இரண்டாவது மிகப்பெரிய வான்வெளி ஆராய்ச்சி மையமாகும்.

இந்த ஆராய்ச்சி மையத்தில் நட்சத்திரங்கள், கோள்கள், பிலாநெட்ஸ், கேலக்ஸீஸ், கிளஸ்டர்ஸ், நெபுலா உள்ளிட்ட கண்களில் பார்க்கக்கூடிய, ஒளி உமிழக்கூடிய ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சனி கிரகத்தில் உள்ள வளையம் போல் யுரேனியத்திற்கும் வளையங்கள் உள்ளது என்று இந்த ஆராய்ச்சி மையத்தில் கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளோம்.

ஆராய்ச்சிகள்

நட்சத்திரங்கள் கூட்டத்தை கண்டுபிடித்துள்ளோம், ஆராய்ச்சிக்கு தேவையான ஏராளமான கோப்புகள் நம்மிடம் உள்ளன.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

விழாவில் காவலூர் வான்வெளி ஆராய்ச்சி மையத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள் தற்போது பணியாற்றும் ஆராய்ச்சியாளர்கள், பள்ளி மாணவர்கள் மற்றும் பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த வான்வெளி ஆராய்ச்சியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story