51 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம்: உள்துறை செயலாளராக பணீந்திரரெட்டி நியமனம்
சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்பட 51 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரியான பணீந்திரரெட்டி உள்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை,
தமிழகம் முழுவதும் 51 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசின் தலைமை செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.
பணீந்திரரெட்டி, எஸ்.கே.பிரபாகர், நசீமுதீன், பிரதீப் யாதவ், எம்.ஏ.சித்திக், டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பலரும் இடமாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.
உள்துறை செயலாளர்
இடமாற்றம் செய்யப்பட்டுள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ள பணியிடங்கள் விவரம் வருமாறு:-
1. வணிக வரித்துறை கமிஷனராக இருந்து வரும் கூடுதல் தலைமை செயலாளர் பணீந்திரரெட்டி உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை கூடுதல் தலைமை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
2. உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை கூடுதல் தலைமை செயலாளராக இருந்து வரும் எஸ்.கே.பிரபாகர் வருவாய் நிர்வாக கமிஷனராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
எம்.ஏ.சித்திக்
3. கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை கூடுதல் தலைமை செயலாளர் நசீமுதீன் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமை செயலாளராக மாற்றப்பட்டுள்ளார்.
4. சென்னை மெட்ரோ ரெயில் மேலாண்மை இயக்குனரான முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை முதன்மை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
5. வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை கமிஷனரான முதன்மை செயலாளர் எம்.ஏ.சித்திக், சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
ராதாகிருஷ்ணன்
6. மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை முதன்மை செயலாளராக இடமாறுதல் செய்யப்பட்டுள்ளார்.
7. நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை முதன்மை செயலாளர் தீரஜ்குமார் வணிக வரிகள் துறை கமிஷனராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
8. மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சிறப்பு பணி அதிகாரியான முதன்மை செயலாளர் டாக்டர் பி.செந்தில்குமார், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் முதன்மை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
9. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலாளரான ஆனந்தகுமார், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளராக மாற்றப்பட்டுள்ளார்.
10. தேசிய சுகாதார திட்டத்தின் இயக்குனரான டாரஸ் அகமது, ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கலெக்டர்கள் மாற்றம்
11. கனிமம் மற்றும் சுரங்கத்துறை இயக்குனர் நிர்மல்ராஜ், போக்குவரத்துத்துறை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
12. வெளிநாடு வாழ் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை கமிஷனர் ஜெசிந்தா லாசரஸ் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை கமிஷனராக மாற்றப்பட்டுள்ளார்.
13. தென்காசி கலெக்டர் கோபால சுந்தரராஜ் சென்னை வணிக வரித்துறை இணை கமிஷனராக இடமாறுதல் செய்யப்பட்டுள்ளார்.
14. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் இணை மேலாண்மை இயக்குனர் சங்கீதா, வணிக வரித்துறை இணை கமிஷனராக (நிர்வாகம்) இடமாறுதல் செய்யப்பட்டுள்ளார்.
15. திருச்சி கலெக்டர் சிவராசு, கோவை வணிக வரித்துறை இணை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மரியம் பல்லவி பல்தேவ்
16. மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் துறை கமிஷனர் மதிவாணன், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை கமிஷனராக மாறுதல் செய்யப்பட்டுள்ளார்.
17. தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு கழகத்தின் மேலாண்மை இயக்குனர் மரியம் பல்லவி பல்தேவ், தொழில்துறை கூடுதல் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
18. இ-நிர்வாகத்தின் இயக்குனர் விஜயேந்திர பாண்டியன், கணக்கு மற்றும் கருவூலத்துறை கமிஷனராக மாற்றப்பட்டுள்ளார்.
19. மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளர் லால்வேனா, உணவு பாதுகாப்புத்துறை கமிஷனராக இடமாறுதல் செய்யப்பட்டுள்ளார்.
தேர்தல் ஆணைய செயலாளர்
20. ராமநாதபுரம் மாவட்ட முன்னாள் கலெக்டர் சந்திரகலா, தொழில்முனைவோர் மேம்பாட்டு நிறுவனத்தின் இயக்குனராக பொறுப்பேற்கிறார்.
21. நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை இணை செயலாளர் ஜான் லூயிஸ் வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை இணை கமிஷனராக இடமாறுதல் செய்யப்பட்டுள்ளார்.
22. அருங்காட்சியக இயக்குனராக இருந்து வரும் ராமன், பேரிடர் மேலாண்மைத்துறை இயக்குனராக மாற்றப்பட்டுள்ளார்.
23. தாட்கோ மேலாண்மை இயக்குனர் விவேகானந்தன், தமிழ்நாடு தேர்தல் ஆணையத்தின் செயலாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
முன்னாள் கலெக்டர் விஜயாராணி
24. சென்னை மாவட்ட முன்னாள் கலெக்டர் விஜயாராணி பட்டுப்பூச்சி வளர்ப்புத்துறை இயக்குனராக பொறுப்பேற்கிறார்.
25. பால் உற்பத்தி மற்றும் பால் வளத்துறை கமிஷனர் பிரகாஷ், ஆவண காப்பகம் மற்றும் வரலாற்று ஆய்வு துறையின் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
26. ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் சிறப்பு செயலாளர் பிங்கி ஜோவல், புள்ளியியல் துறை கமிஷனராக மாற்றப்பட்டுள்ளார்.
27. புள்ளியியல் துறை கமிஷனர் கருணாகரன், ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் சிறப்பு செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
போக்குவரத்து துறை சிறப்பு செயலாளர்
28. கருவூலத்துறை கமிஷனர் வெங்கடேஷ், போக்குவரத்து துறை சிறப்பு செயலாளராக மாற்றப்பட்டுள்ளார்.
29. வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை இணை கமிஷனர் சீதாலட்சுமி, சமூக நலன் மற்றும் பெண்கள் மேம்பாட்டுத்துறை இணை செயலாளராக இடமாறுதல் செய்யப்பட்டுள்ளார்.
30. ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் இயக்குனர் பிரவீன் பி.நாயர், இ-நிர்வாகத்துறையின் இயக்குராக பொறுப்பேற்கிறார்.
31. தமிழ்நாடு பாடநூல்கழகத்தின் மேலாண்மை இயக்குனர் மணிகண்டன், பள்ளிக்கல்வித்துறை இணைச்செயலாளராகமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
ஹர்சகாய் மீனா
32. ஆவணக்காப்பகம் மற்றும் வரலாற்று ஆய்வுத்துறை கமிஷனரான முதன்மை செயலாளர் ஹர்சகாய் மீனா, திட்டம் மற்றும் மேம்பாட்டுத்துறை சிறப்பு செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
33. பெருநகர சென்னை மாநகராட்சியின் துணை கமிஷனர் (சுகாதாரம்) நர்னவரே மனிஸ் சங்கராவ் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் கூடுதல் இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
34. தமிழ்நாடு குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்றல் வாரியத்தின் மேலாண்மை இயக்குனர் பிரதீப் குமார் திருச்சி கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தர்மபுரி கலெக்டர்
35. பட்டுப்பூச்சி வளர்ச்சித்துறை இயக்குனர் சாந்தி தர்மபுரி கலெக்டராக பொறுப்பேற்கிறார்.
36. மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இயக்குனர் ஜான் டாம் வர்கீஸ், ராமநாதபுரம் கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.
37. பெருநகர சென்னை குடிநீர் மற்றும் வடிகால் வாரியத்தின் முன்னாள் நிர்வாக இயக்குனர் ஆகாஷ், தென்காசி கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.
38. தமிழ்நாடு நகர்ப்புற நிதி மற்றும் அடிப்படை கட்டமைப்பு மேம்பாட்டு கழகத்தின் மேலாண்மை இயக்குனரான கூடுதல் தலைமை செயலாளர் எம்.சாய்குமார் தமிழ்நாடு காகித நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஷில்பா பிரபாகர் சதீஷ்
39. தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை செயலாளர் கிர்லோஷ்குமார், பெருநகர சென்னை குடிநீர் வினியோகம் மற்றும் வடிகால் வாரியத்தின் மேலாண்மை இயக்குனராக மாற்றப்பட்டுள்ளார்.
40. தர்மபுரி கலெக்டர் திவ்யதர்ஷினி, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனராக இடமாறுதல் செய்யப்பட்டுள்ளார்.
41. முதல்வரின் முகவரி திட்டத்தின் சிறப்பு அதிகாரியும், சிறப்பு திட்ட செயலாக்கத்துறையின் இணை செயலாளருமான ஷில்பா பிரபாகர் சதீஷ், தேசிய சுகாதார திட்டத்தின் இயக்குனராக மாற்றப்பட்டுள்ளார். அதேவேளையில் முதல்வரின் முகவரி திட்டத்தின் சிறப்பு அதிகாரியாக முழு பொறுப்பில் இருப்பார்.
ஜெயஸ்ரீ முரளிதரன்
42. தொழில்துறை சிறப்பு செயலாளர் ஜெயஸ்ரீமுரளிதரன், தமிழ்நாடு தொழில் மேம்பாட்டு கழகத்தின் மேலாண்மை இயக்குனராக இடமாறுதல் செய்யப்பட்டுள்ளார்.
43. தமிழ்நாடு தேர்தல் ஆணைய செயலாளர் சுந்தரவள்ளி, சிப்காட் மேலாண்மை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
44. சிப்காட் மேலாண்மை இயக்குனர் ஆனந்த், சிட்கோ மேலாண்மை இயக்குனராக மாற்றப்பட்டுள்ளார்.
போக்குவரத்து துறை கமிஷனர்
45. சிட்கோ மேலாண்மை இயக்குனர் கஜலட்சுமி, தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் மேலாண்மை இயக்குனராக பொறுப்பேற்கிறார்.
46. பேரிடர் மேலாண்மைத்துறை இயக்குனர் கந்தசாமி, தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி கழகத்தின் மேலாண்மை இயக்குனராக மாற்றப்பட்டுள்ளார்.
47. போக்குவரத்து துறை கமிஷனர் நடராஜன், தமிழ்நாடு கடல் வாரியத்தின் துணை தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக இடமாறுதல் செய்யப்பட்டுள்ளார்.
48. பெருநகர சென்னை குடிநீர் வினியோகம் மற்றும் வடிகால் வாரியத்தின் நிர்வாக இயக்குனர் முதன்மை செயலாளர் விஜயராஜ்குமார், மின் நிதி மற்றும் அடிப்படை கட்டமைப்பு மேம்பாட்டு கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கனிமத்துறை கமிஷனர்
49. ராமநாதபுரம் கலெக்டர் சங்கர்லால் குமாவாத்,பெருநகர சென்னை மாநகராட்சியின் இணை கமிஷனராக (சுகாதாரம்) மாற்றப்பட்டுள்ளார்.
50. வணிக வரித்துறை இணை கமிஷனர் (நிர்வாகம்) கற்பகம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தின் இணை மேலாண்மை இயக்குனராக பொறுப்பேற்கிறார்.
51. மதுவிலக்கு மற்றும்ஆயத்தீர்வை கமிஷனர்ஜெயகாந்தன், கனிமம் மற்றும் சுரங்கத்துறை கமிஷனராக இடமாறுதல் செய்யப்பட்டுள்ளார்.
ஒரே நேரத்தில் 51 பேர் மாற்றம்
தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பின்பு முதன் முறையாக ஒரே நேரத்தில்51 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக அரசின் முக்கிய துறைகளில் ஒன்றான உள்துறையின் கூடுதல் தலைமை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரியான பணீந்திரரெட்டி வருவாய் நிர்வாக கமிஷனர், இந்து அறநிலையத்துறைகமிஷனர் உள்ளிட்டபல்வேறு முக்கிய பதவிகளை வகித்துள்ளார்.
2½ ஆண்டுகள் பதவி
இதற்கு முன்பு உள்துறை செயலாளராக இருந்த எஸ்.கே.பிரபாகர், கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் அந்த பதவியில் நியமிக்கப்பட்டார். அவர், உள்துறை செயலாளராக சுமார் 2½ ஆண்டுகள் அந்த பதவியில் இருந்துள்ளார்.
தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற சமயத்தில் பல்வேறு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்ட போதும் கொரோனா பரவலை தடுக்க மிகச்சிறந்த முறையில் பணியாற்றிய காரணத்துக்காக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலாளராக இருந்த டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் அதே பதவியில் தொடர்ந்தார். 2 ஆண்டுகளாக அவர் இந்த பதவியில் இருந்தார்.
தற்போது அவர் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறைக்குமாற்றப்பட்டுள்ளார்.