இன்னுயிர் காப்போம் திட்டத்தில் 511 பேருக்கு சிகிச்சை


இன்னுயிர் காப்போம் திட்டத்தில் 511 பேருக்கு சிகிச்சை
x

இன்னுயிர் காப்போம் திட்டத்தில் 511 பேருக்கு சிகிச்சை அளிக்கப்படுவதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.

திருப்பத்தூர்

தமிழகத்தில் சாலை விபத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதல் 48 மணி நேரத்திற்கான அவசர மருத்துவ சிகிச்சை செலவை தமிழ்நாடு அரசே மேற்கொள்ளும் வகையில் இன்னுயிர் காப்போம் - நம்மைகாக்கும் - 48 என்ற திட்டத்தினை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். இந்த திட்டத்தின் கீழ் 81 மருத்துவ சிகிச்சை முறைகளுக்கு ஒருவருக்கு ரூ.ஒரு லட்சம் செலவில் உள்நோயாளியாக அனுமதிக்கப்படும் மருத்துவமனையில் 48 மணி நேரம் வரை சிகிச்சை அளிக்கும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூர், வாணியம்பாடி, ஆம்பூர், நாட்டறம்பள்ளி ஆகிய 4 அரசு மருத்துவமனைகள் மற்றும் 3 தனியார் மருத்துவமனைகள் என மொத்தம் 7 மருத்துவமனைக இணைக்கப்பட்டு, மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது.

திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் இதுவரை 853 பேர் சாலை விபத்தில் காயமடைந்து அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் தகுதி உடைய 140 பேருக்கு ரூ.6,43,050 மதிப்பிலான மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டுள்ளது. வாணியம்பாடி, ஆம்பூர், நாட்டறம்பள்ளி ஆகிய 3 அரசு மருத்துவமனைகளில் இதுவரை 1,290 பேர் விபத்தில் காயம் அடைந்து அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் தகுதி உடைய 371 பேருக்கு ரூ.14,27,591 மதிப்பிலான மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த தகவலை கலெக்டர் அமர்குஷ்வாஹா தெரிவித்துள்ளார்


Next Story