போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் போட்டி தேர்வில் 5,233 பேர் பங்கேற்பு


போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் போட்டி தேர்வில் 5,233 பேர் பங்கேற்பு
x
தினத்தந்தி 26 Aug 2023 5:17 PM IST (Updated: 26 Aug 2023 5:54 PM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலையில் நடைபெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் போட்டி தேர்வில் 5 ஆயிரத்து 252 பேர் பங்கேற்றனர். தேர்வை பொருளாதார குற்றப்பிரிவு ஐ.ஜி. சத்யபிரியா ஆய்வு செய்தார்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் நடைபெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் போட்டி தேர்வில் 5 ஆயிரத்து 233 பேர் பங்கேற்றனர். தேர்வை பொருளாதார குற்றப்பிரிவு ஐ.ஜி. சத்யபிரியா ஆய்வு செய்தார்.

சப்- இன்ஸ்பெக்டர் போட்டி தேர்வு

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலம் காலியாக உள்ள 464 ஆண்கள் மற்றும் 152 பெண்கள் உள்பட 621 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வு இன்று மாநிலம் முழுவதும் நடைபெற்றது.

அதன்படி திருவண்ணாமலை மாவட்டத்தில் கம்பன் கலை அறிவியல் கல்லூரி, சண்முகா கலை அறிவியல் கல்லூரி, கரன் கலை அறிவியல் கல்லூரி, கலைஞர் கருணாநிதி அரசு கலைக்கல்லூரி, சிஷ்யா மெட்ரிக் பள்ளி, எஸ்.ஆர்.ஜி.டி.எஸ். மெட்ரிக் பள்ளி என 6 மையங்களில் தேர்வு நடைபெற்றது.

இந்த தேர்விற்கு மாவட்டத்தில் 4 ஆயிரத்து 930 ஆண்கள், 1,471 பெண்கள் என மொத்தம் 6 ஆயிரத்து 401 பேர் விண்ணப்பித்து இருந்தனர். தேர்வையொட்டி விண்ணப்பதாரர்கள் தேர்வு மையங்கள் முன்பு காலையில் இருந்தே அணிவகுத்து நின்றனர்.

5,233 பேர் பங்கேற்பு

போலீசார் விண்ணப்பதாரர்களின் ஹால் டிக்கெட்டை சோதனை செய்த பின்னர் அவர்களை தேர்வறைக்குள் அனுப்பினர். இந்த தேர்வில் காலையில் பொது அறிவு தேர்வும், மதியம் தமிழ் தேர்வும் நடைபெற்றது.

தேர்வையொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் தலைமையில் 600-க்கும் மேற்பட்ட போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

மேலும் தேர்வு மையங்களை பொருளாதார குற்றப்பிரிவு ஐ.ஜி. சத்யபிரியா நேரில் சென்று ஆய்வு செய்தார். இந்த தேர்வில் 1168 பேர் தேர்வு எழுத வரவில்லை. மீதமுள்ள 5 ஆயிரத்து 233 பேர் தேர்வு எழுதினர்.

எழுத்து தேர்வில் வெற்றி பெறுபவர்கள் உடல் தகுதி தேர்வில் கலந்து கொள்ள அழைக்கப்படுவார்கள் என்று போலீசார் தெரிவித்தனர்.


Next Story