குமரியில் 3 மையங்களில் நடந்தது:புள்ளியியல் துறை பணியிடங்களுக்கான தேர்வை 537 பேர் எழுதினர்


குமரியில் 3 மையங்களில் நடந்தது:புள்ளியியல் துறை பணியிடங்களுக்கான தேர்வை 537 பேர் எழுதினர்
x

குமரி மாவட்டத்தில் 3 மையங்களில் நடந்த புள்ளியியல் துறை பணியிடங்களுக்கான தேர்வை 537 பேர் எழுதினர்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் 3 மையங்களில் நடந்த புள்ளியியல் துறை பணியிடங்களுக்கான தேர்வை 537 பேர் எழுதினர்.

புள்ளியியல் துறையில் தேர்வு

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் (டி.என்.பி.எஸ்.சி.) ஒருங்கிணைந்த புள்ளியியல் சார்நிலை பணிகளில் புள்ளியியல் உதவி ஆய்வாளர் பதவிக்கு 211 பேர், கணக்காளர்- 5, புள்ளியியல் தொகுப்பாளர் ஒருவர் என மொத்தம் 217 காலி பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு நேற்று தமிழகம் முழுவதும் 15 மாவட்டங்களில் நடந்தது.

அதன்படி குமரி மாவட்டத்தில் நாகர்கோவிலில் உள்ள டதி பள்ளி, டி.வி.டி. பள்ளி மற்றும் எஸ்.எல்.பி. பள்ளி ஆகிய 3 தேர்வு மையங்கள் நேற்று காலை மற்றும் மதியம் என 2 கட்டங்களாக தேர்வு நடைபெற்றது. காலை 9.30 மணி முதல் பகல் 12.30 மணி வரை புள்ளியியல், கணிதவியல் தேர்வும், பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை கட்டாய தமிழ் தொழி தகுதி தேர்வு, பொது அறிவு, திறனாய்வு தேர்வும் நடந்தது.

371 பேர் தேர்வு எழுதவில்லை

குமரி மாவட்டத்தில் இருந்து புள்ளியியல் துறைக்கான தேர்வை எழுத மொத்தம் 908 பேர் விண்ணப்பத்திருந்தனர். அவர்களின் நேற்று 537 பேர் தேர்வை எழுதினர். 371 பேர் தேர்வு எழுதவில்லை. முன்னதாக தேர்வு எழுத ஆண்கள், பெண்கள் காலை 8 மணி முதலே தேர்வு மையங்களுக்கு வரத்தொடங்கினர்.

தேர்வுக்கு வந்தவர்களின் நுழைவு சீட்டை, ஹால் டிக்கெட், அடையாள அட்டை ஆகியவற்றை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். பின்னர் தேர்வாளர்கள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பிறகு தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். தேர்வு அறையில் கண்காணிப்பு குழுக்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.


Next Story