54 பவுன் நகைகள் -1½ கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளை


மயிலாடுதுறை அருகே என்ஜினீயர் வீட்டின் கதவை உடைத்து 54 பவுன் நகைகள் -1½ கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளையடித்து சென்ற மா்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

மயிலாடுதுறை

மயிலாடுதுறை அருகே என்ஜினீயர் வீட்டின் கதவை உடைத்து 54 பவுன் நகைகள் -1½ கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளையடித்து சென்ற மா்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

என்ஜினீயர்

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் தாலுகா வாணாதிராஜபுரம் மெயின்ரோட்டை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவருடைய மகன் பிரகாஷ்(வயது28). இவர் சென்னையில் என்ஜினீயராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவிக்கு வளைகாப்பு முடிந்து 10 நாட்களுக்கு முன்பு பிரசவத்துக்காக நாகையில் உள்ள அவரது தாய் வீட்டுக்கு சென்றார். இதனால் பிரகாசின் வீடு பூட்டப்பட்டு இருந்தது.

பிரகாசின் தந்தை ராமகிருஷ்ணன் அடிக்கடி வாணாதிராஜபுரத்தில் உள்ள தனது மகனின் வீட்டை வந்து பார்த்து சென்றார்.

நேற்று முன்தினம் மாலை ராமகிருஷ்ணன் தனது மகன் பிரகாஷ் வீட்டுக்கு வந்து பாா்த்தார். அப்போது வீட்டில் கிரில் கதவு பூட்டு மற்றும் வாசல் கதவு உடைக்கப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டுக்குள் சென்று பாா்த்தாா்.

54 பவுன் கொள்ளை

அப்போது வீட்டின் பூஜை அறையில் இருந்த மரபீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 54 பவுன் நகைகள், 1½ கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில் மயிலாடுதுறை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா, துணை போலீஸ் சூப்பிரண்டு வசந்தராஜ் மற்றும் குத்தாலம் போலீசார் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையின் போது அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா. பதிவுகள் ஆய்வு செய்யப்பட்டன. கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு தடயங்கள் பதிவு செய்யப்பட்டன.

மேலும் துணை போலீஸ் சூப்பிரண்டு வசந்தராஜ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் கொள்ைளயர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.


Related Tags :
Next Story