குறைதீர்க்கும் கூட்டத்தில் 54 மனுக்கள் பெறப்பட்டன
குறைதீர்க்கும் கூட்டத்தில் 54 மனுக்கள் பெறப்பட்டன
மதுரை ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள மாநகராட்சி மண்டலம்-2 (வடக்கு) அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நேற்று நடந்தது. மாநகராட்சி கமிஷனர் சிம்ரன்ஜீத் சிங் முன்னிலை வகித்தார். மேயர் இந்திராணி தலைமை தாங்கினார். முகாம் காலை 10 மணிக்கு தொடங்கி 12.30 மணி வரை நடந்தது. அதில் சொத்துவரி பெயர் மாற்றம் வேண்டி 8 மனுக்களும், புதிய வரி விதிப்பு வேண்டி 4 மனுக்களும், காலிமனை வரி விதிப்பு வேண்டி 7 மனுக்களும், புதிய குடிநீர் குழாய் இணைப்பு வேண்டி 5 மனுக்களும், சொத்துவரி, ஆக்கிரமிப்பு மற்றும் சாலை வசதி, சுகாதாரம் உள்ளிட்ட இதர கோரிக்கைகள் வேண்டி 30 மனுக்களும் என மொத்தம் 54 மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டன. இந்த மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மேயர் இந்திராணி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
முகாமில் துணை மேயர் நாகராஜன், மண்டல தலைவர் சரவணபுவனேஸ்வரி, உதவி ஆணையாளர் வரலட்சுமி, செயற்பொறியாளர் ரவிச்சந்திரன், மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன், உதவி செயற்பொறியாளர் (திட்டம்) காமராஜ், சுகாதார அலுவலர் சிவசுப்பிரமணியன், உதவி வருவாய் அலுவலா் அகமது இப்ராஹிம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.