புதரில் பதுக்கி வைத்திருந்த 56 கிலோ கஞ்சா பறிமுதல்


புதரில் பதுக்கி வைத்திருந்த 56 கிலோ கஞ்சா பறிமுதல்
x

புதரில் பதுக்கி வைத்திருந்த 56 கிலோ கஞ்சா பறிமுதல்

தஞ்சாவூர்

அதிராம்பட்டினம்

அதிராம்பட்டினம் அருகே புதரில் பதுக்கி வைத்திருந்த 56 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, இலங்கைக்கு கடத்த முயற்சியா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

56 கிலோ கஞ்சா பறிமுதல்

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே உள்ள தம்பிக்கோட்டை மறவக்காடு கிராமத்தில் உப்பளம் செல்லும் சாலையோரத்தில் உள்ள ஒரு பாலிதீன் பைகளில் மர்ம பொருட்கள் கிடப்பதாக நேற்று மாலை அதிராம்பட்டினம் நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு தகவல் வந்தது.

இதையடுத்து பட்டுக்கோட்டை கடலோர பாதுகாப்பு குழும இன்ஸ்பெக்டர் மஞ்சுளா, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அய்யப்பசாமி மற்றும் நுண்ணறிவு பிரிவு போலீசார் அதிராம்பட்டினம் கடற்கரை தம்பிக்கோட்டை மறவக்காடு கிழக்கு கடற்கரை சாலைக்கு கிழக்கே 200 மீட்டர் தூரத்தில் உப்பளம் செல்லும் சாலையின் புதரில் இரண்டு பச்சை நிற பாலித்தீன் பைகளில் 28 பண்டல்களில் 56 கிலோ கஞ்சா பதுக்கிவைத்திருந்தது தெரியவந்தது. இதனை போலீசார் கைப்பற்றினர்.

இலங்கைக்கு கடத்த முயற்சியா?

இதுகுறித்து நாகப்பட்டினம் போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு அதிகாரிக்கு தகவல் தெரிவிக்கபட்டுள்ளது. உப்பளம் அருகே அடர்ந்த அலையாத்தி காடுகள் உள்ள நிலையில் கடல் வழியாக இலங்கைக்கு கடத்த முயற்சி நடந்ததா? அல்லது வெளி மாநிலத்துக்குகொண்டு செல்ல பதுக்கப்பட்டதா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story