மருமகளுடன் சேர்ந்து சேலையில் உடற்பயிற்சி செய்யும் 56 வயது மாமியார்


மருமகளுடன் சேர்ந்து சேலையில் உடற்பயிற்சி செய்யும் 56 வயது மாமியார்
x
தினத்தந்தி 21 Nov 2022 12:55 PM IST (Updated: 21 Nov 2022 12:58 PM IST)
t-max-icont-min-icon

சென்னையை சேர்ந்த 56 வயது பெண் ஒருவர் சேலை கட்டிக்கொண்டு ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சென்னை,

சென்னையை சேர்ந்த 56 வயது பெண் ஒருவர் சேலை கட்டிக்கொண்டு ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ ஹியூமன்ஸ் ஆப் மெட்ராஸ் என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

வீடியோவில், கால் மற்றும் முழுங்கால் வலியால் 56 வயது பெண் பெரிதும் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனையடுத்து, அவரது மகன் தினமும் ஜிம்மிற்கு சென்று உடற்பயிற்சி செய்ய சொல்லியிருக்கிறார்.

அதன்பிறகு அவரின் மகனின் ஜிம்மிற்கு சென்று தனது மருமகளுடன் சேர்ந்து தினமும் உடற்பயிற்சி செய்ய தொடங்கினார். ஜிம்மில் பவர் லிப்ட் மற்றும் புஷ்அப் உள்ளிட்ட உடற்பயிற்சிகளை தொடர்ச்சியாக செய்து வந்துள்ளார். தற்போது அவர் கால் மற்றும் முழுங்கால் வலியில் இருந்து குணமாகி விட்டதாக தெரிவித்துள்ளார்.

இந்த வீடியோவின் கேப்சனில், "அவருக்கு 56 வயதாகிறது . அதனால் என்ன? அவள் சேலை அணிந்து சாதாரணமாக பவர் லிப்டிங் மற்றும் புஷ்அப் போன்ற உடற்பயிற்சியை செய்கிறார்.! வயது என்பது வெறும் எண் மட்டுமே. பலமான மற்றும் இளமையான மனதை கொண்ட ஊக்கமளிக்கும் மாமியார் என்பதை நிரூபிக்கிறது.அர்பணிப்புடனுடன் மருமகளின் ஆதரவுடனும் தொடர்ந்து உடற்பயிற்சி செய்து வருகிறார்.

இந்த வீடியோவை பார்த்து பலர் அந்த பெண்ணுக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இது உத்வேகம் அளிப்பதாகவும் ஊக்கம் அளிப்பதாகவும் மடடுமல்லாமல் பெண்களுக்கான ஒவ்வொரு தடைகளையும் உடைக்கிறது. என பயனர் ஒருவர் பதிவிட்டுள்ளார்.

இந்த வீடியோவை ஒரு மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்கள் கடந்துள்ளது.




Next Story