மாவட்டத்தில் உள்ள உழவர் சந்தைகளில் 58¾ டன் காய்கறி ரூ.16½ லட்சத்துக்கு விற்பனை


மாவட்டத்தில் உள்ள உழவர் சந்தைகளில் 58¾ டன் காய்கறி ரூ.16½ லட்சத்துக்கு விற்பனை
x

ஈரோடு மாவட்டத்தில் உள்ள உழவர் சந்தைகளுக்கு கொண்டு வரப்பட்ட 58¾ டன் காய்கறி ரூ.16½ லட்சத்துக்கு விற்பனையானது.

ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் உள்ள உழவர் சந்தைகளுக்கு கொண்டு வரப்பட்ட 58¾ டன் காய்கறி ரூ.16½ லட்சத்துக்கு விற்பனையானது.

உழவர் சந்தை

ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு சம்பத் நகர், பெரியார் நகர், பெருந்துறை, கோபி, சத்தியமங்கலம், தாளவாடி ஆகிய 6 இடங்களில் உழவர் சந்தை செயல்பட்டு வருகின்றன. விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த காய்கறியை பல்வேறு பகுதிகளில் இருந்து உழவர் சந்தைகளுக்கு கொண்டு வந்து நேரடியாக விற்பனை செய்கின்றனர்.

வெளி மார்க்கெட்டுகளை விட உழவர் சந்தைகளில் விலை மலிவாகவும், தரமானதாகவும் காய்கறி கிடைப்பதால் பொதுமக்கள் இங்கு வந்து காய்கறியை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

ரூ.16½ லட்சத்துக்கு விற்பனை

இந்த நிலையில், விடுமுறை தினமான நேற்று மாவட்டத்தில் உள்ள 6 உழவர் சந்தைகளிலும் விவசாயிகள் அதிக அளவில் காய்கறியை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். அனைத்து உழவர் சந்தைகளிலும் காலை முதலே பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. பொதுமக்கள் தங்களுக்கு தேவையான காய்கறியை வாங்கிச்சென்றனர்.

இதில், ஈரோடு மாநகரில் உள்ள சம்பத் நகர் உழவர் சந்தைக்கு வரத்தான 21.53 டன் காய்கறி ரூ.6 லட்சத்து 25 ஆயிரத்து 438-க்கு விற்பனையானது. இதேபோல், மாவட்டம் முழுவதும் உள்ள 6 உழவர் சந்தைகளிலும் மொத்தம் வரத்தான 58.77 டன் காய்கறி ரூ.16 லட்சத்து 47 ஆயிரத்து 992-க்கு விற்பனை ஆனதாக உழவர் சந்தை நிர்வாகிகள் தெரிவித்தனர்.


Next Story