5-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை; ஆசிரியர் பணியிடை நீக்கம்

5-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை; ஆசிரியர் பணியிடை நீக்கம்
x
தினத்தந்தி 13 Jan 2023 6:45 PM GMT (Updated: 2023-01-14T00:16:50+05:30)

கீழ்வேளூர் அருகே 5-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட கல்வி அலுவலர் உத்தரவிட்டார்.

நாகப்பட்டினம்

கீழ்வேளூர் அருகே 5-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட கல்வி அலுவலர் உத்தரவிட்டார்.

5-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை

நாகை மாவட்டம் கீழ்வேளூரை அடுத்த தென்மருதூரை சேர்ந்தவர் தேவதாஸ்(வயது 38). இவர், ஆந்தகுடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார்.

இந்த பள்ளியில் 5-ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு, ஆசிரியர் தேவதாஸ் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது.

ஆசிரியர் பணியிடை நீக்கம்

இதுகுறித்து மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் கார்த்திகேயன் விசாரணை நடத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இ்ந்த விசாரணையில் ஆசிரியர் தேவதாஸ், மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரிய வந்தது.

அதனைத்தொடர்ந்து ஆசிரியர் தேவதாசை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட கல்வி அலுவலர் உத்தரவிட்டார்.

Next Story