கோபியில் 5-வது நாளாக போராட்டம்: சாலை பணியாளர்கள் 158 பேர் கைது


கோபியில் 5-வது நாளாக போராட்டம்: சாலை பணியாளர்கள் 158 பேர் கைது
x

கோபியில் போராட்டம் நடத்திய சாலை பணியாளர்கள் 158 பேர் கைது செய்யப்பட்டனா்.

ஈரோடு

கோபியில் 5-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட சாலை பணியாளர்கள் 158 பேரை போலீசார் கைது செய்தனர்.

5-வது நாளாக போராட்டம்

கோபி கோட்ட பொறியாளரின் அரசு விதிமீறல் நடவடிக்கையை கண்டிப்பது. சாலை பணியாளர்களின் ஒட்டுமொத்த முதுநிலை பட்டியல் வெளியிட்டதில் அரசு விதிமுறைகள் தமிழ்நாடு சார்நிலை பணியமைப்பு விதிகள் 35, 35ஏ விதியினை பின்பற்றாமல் வெளியிடப்பட்ட முரண்பாடுள்ள முதல் நிலை பட்டியலை மாற்றி அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்கத்தினர் தங்கள் குடும்பத்துடன் கோபி கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு கடந்த 4 நாட்களாக சமையல் செய்து சாப்பிட்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்படி நேற்று 5-வது நாளாக போராட்டம் நடந்தது. அனுமதியின்றி இந்த போராட்டம் நடந்து வந்ததாக கூறப்படுகிறது.

158 பேர் கைது

இதனால் நேற்று அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த கோபி போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தவர்களை கைது செய்ய முயன்றனர். அப்போது போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதனால் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட ஆண்கள், பெண்களை குண்டுகட்டாக தூக்கி வேனில் ஏற்றி கைது செய்தனர். மொத்தம் 150 ஆண்கள், 8 பெண்கள் என 158 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். மாலையில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.


Next Story