நாகை தாலுகாவில் பள்ளிகளுக்கு 5-ந் தேதி விடுமுறை
சிக்கல் சிங்காரவேலவர் கோவில் குடமுழுக்கு விழாவையொட்டி நாகை தாலுகாவில் பள்ளிகளுக்கு 5-ந் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நாகப்பட்டினம்
நாகை மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- நாகை தாலுகா சிக்கலில் உள்ள சிங்காரவேலவர் கோவில் குடமுழுக்கு வருகிற 5-ந் தேதி (புதன்கிழமை) அன்று நடக்கிறது. இந்த விழாவில் கலந்து கொள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள். எனவே நாகை தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் வருகிற 5-ந்தேதி விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் வருகிற 8-ந்தேதி (சனிக்கிழமை) பள்ளிகளுக்கு வேலை நாளாகும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story