9 கிலோ கஞ்சா வைத்திருந்த 6 வாலிபர்கள் கைது


9 கிலோ கஞ்சா வைத்திருந்த   6 வாலிபர்கள் கைது
x
திருப்பூர்


நல்லூர் போலீஸ் எல்லைக்குட்பட்ட முத்தண்ணம் பாளையம் அருகே கஞ்சா விற்கப்படுவதாக வந்த ரகசிய தகவலின்படி போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது பாலாஜி நகரில் வசித்து வரும் புஜ்ஜி என்ற ஜெபராஜ்(25), வீட்டில் கஞ்சா வைத்து இருந்தது தெரியவந்தது. அவரைப்பிடித்து விசாரித்த போது ஆந்திராவில் இருந்து கஞ்சா வாங்கி வந்து விற்பனை செய்தது தெரிய வந்தது.

மேலும் போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் கரட்டாங்காட்டை சேர்ந்த ராஜா(33), கே.செட்டிபாளையத்தைசேர்ந்த பாலகிருஷ்ணன்(24), தீனதயாளன்(22), சுதன்(21), வீரபாண்டிை சேர்ந்த லட்சுமணன்(21) ஆகியோர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரிய வந்தது. 6 பேரையும் கைது செய்த நல்லூர் போலீசார் அவர்களிடம் இருந்து 9 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.


Next Story