கோவில் திருவிழாவில் போலீசாரை தாக்கிய 6 பேர் கைது


கோவில் திருவிழாவில் போலீசாரை தாக்கிய 6 பேர் கைது
x

கோவில் திருவிழாவில் போலீசாரை தாக்கிய 6 பேரை செய்து விசாரித்து வருகிறார்கள்.

மதுரை

வாடிப்பட்டி

வாடிப்பட்டி அருகே குட்லாடம்பட்டியில் காளியம்மன்கோயில் திருவிழா வையொட்டி நேற்றுமுன் தினம் இரவு 7 மணிக்கு ஆடலும் பாடலும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த நிகழ்ச்சிக்கு பாதுகாப்பிற்காக வாடிப்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை, ஏட்டுகள் ராஜேந்திரன், ெரங்கநாதன், பாண்டி, பழனிவேல்ராஜன் ஆகியோர் சென்றிருந்தனர். இந்தநிலையில் 8.30 மணியளவில் நாடக மேடை முன்பாக திடீரென்று இருதரப்பினருக்கு தகராறு ஏற்பட்டு அங்கிருந்து சேர்களை எடுத்து ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். அப்போது அவர்களை விலக்கச் சென்ற போலீஸ் ஏட்டு ராஜேந்திரன், ெரங்கநாதன் ஆகியோரை அதே ஊரைச் சேர்ந்த ரஞ்சித், வீரணன் ஆகியோர் சேர்ந்து தாக்கி காயப்படுத்தினர். உடனே மற்ற போலீசார் அவர்கள் இருவரையும் பிடித்தனர். அப்போது அங்கு வந்த விஜய்பாண்டி, பழனி, பாஸ்கரன், அழகுமலை ஆகியோர் போலீசாரிடம் இருந்து ரஞ்சித், வீரணன் ஆகியோரை விடுவித்தனர். இது சம்பந்தமாக போலீஸ் ஏட்டு ராஜேந்திரன் கொடுத்த புகாரின் பேரில் வாடிப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து ரஞ்சித், வீரணன், விஜய்பாண்டி, பழனி, பாஸ்கரன், அழகுமலை ஆகிய 6 பேரை கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.


Related Tags :
Next Story