சாராயம் விற்ற 6 பேர் கைது


சாராயம் விற்ற 6 பேர் கைது
x

சாராயம் விற்ற 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

கள்ளக்குறிச்சி

கச்சிராயப்பாளையம்,

கச்சிராயப்பாளையம் பகுதியில் சட்டத்தை மீறி சாராயம் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. இதை தடு்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் பலரும் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து சாராயம் விற்பனை செய்வதை தடுக்க போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் உத்தரவின்பேரில் கச்சிராயப்பாளையம் இன்ஸ்பெக்டர் ஸ்ரீபிரியா, தியாகதுருகம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது இதையடுத்து தனிப்படை போலீசார் கச்சிராயப்பாளையம் பகுதியில் தீவிர ரோந்து பணி மேற்கொண்டனர். இதில் மண்மலை கிராமத்தில் சாராயம் விற்பனை செய்த ஆறுமுகம் மனைவி சாந்தி என்பவரை போலீசார் கைது செய்தனர். இதேபோல் சாராயம் விற்றதாக க.அலம்பலம் கிராமத்தை சேர்ந்த கலைச்செல்வி (34), விஜயா (42), பூவாயி (55) மற்றும் குதிரைச்சந்தலை சேர்ந்த தாஸ் (22), மாதவச்சேரி ஜெயராமன் (63) ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த சாராயமும் பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story