உழவர் சந்தைக்கு வந்த 6 அடி நீள புடலங்காய்கள்


உழவர் சந்தைக்கு வந்த 6 அடி நீள புடலங்காய்கள்
x

உழவர் சந்தைக்க வந்த 6 அடி நீள புடலங்காய்களை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.

சேலம்

அன்னதானப்பட்டி:-

சேலம் தாதகாப்பட்டி உழவர் சந்தைக்கு 3 அடி வரை நீளமுள்ள உள்ள புடலங்காய் விற்பனைக்கு வருவது வழக்கமாகும். இந்த நிலையில் உழவர் சந்தைக்கு நேற்று 6 அடி நீளமுள்ள பெரிய புடலங்காய்கள் விற்பனைக்கு வந்தன. சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி அருகே கம்மாளப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி வள்ளி (வயது 60) என்பவரின் தோட்டத்தில் இந்த புடலங்காய்கள் விளைந்துள்ளன. இப்போது விற்பனைக்கு வந்துள்ள புடலங்காய்கள் நாட்டு ரக பச்சை வரி புடலங்காய்கள் ஆகும். பந்தலில் விளைவித்த புடலங்காய்கள் என்பதால் இவை வழக்கமான புடலங்காய்களை விட நீளமான அளவில் உள்ளது.

இவற்றின் சுவை மற்ற ரகங்களை விட நன்றாகவே இருக்கும். 1 கிலோ ரூ.20- க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இவை வழக்கமான புடலங்காய்களை காட்டிலும் நீளமாக, பெரிய அளவில் இருப்பதால் இந்த புடலங்காய்களை உழவர் சந்தைக்கு வந்த பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச் சென்றனர். ஜனவரி, பிப்ரவரி மாதங்கள் வரை சீசன் காரணமாக இவற்றின் வரத்து அதிகமாக இருக்கும் என உழவர் சந்தை வேளாண் அலுவலர் மகேந்திரன் தெரிவித்தார்.


Next Story