ஜோலார்பேட்டை அருகே ரெயிலில் கடத்திய 6 கிலோ கஞ்சா பறிமுதல்


ஜோலார்பேட்டை அருகே  ரெயிலில் கடத்திய 6 கிலோ கஞ்சா பறிமுதல்
x

ஜோலார்பேட்டை அருகே ரெயிலில் கடத்திய 6 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

திருப்பத்தூர்

பீகார் மாநிலம் பாட்னா ரெயில் நிலையத்தில் இருந்து கேரள மாநிலம் எர்ணாகுளம் வரை செல்லும் பாட்னா எக்ஸ்பிரஸ் ரெயில் வாணியம்பாடி- ஜோலார்பேட்டை ரெயில் நிலையங்களுக்கு இடையே சென்றபோது தனிப்படை போலீசார் சோதனை நடத்தினர். அப்போது முன் பதிவு செய்யப்பட்ட பெட்டியில் பயணம் செய்த வாலிபரிடம் சந்தேகத்தின்பேரில் அவரது உைடமைகளை சோதனை செய்தனர். அப்போது டிராவல் பேக்கில் 6 கிலோ கஞ்சா வைத்திருந்தது தெரிய வந்தது.

இதனையடுத்து தனிப்படை போலீசார் அந்த வாலிபரை ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசில் ஒப்படைத்தனர். அவரிடம் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் இளவரசி, சப்- இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மற்றும் போலீசார் விசாரணை செய்ததில் அவர் ஒடிசா மாநிலம் பத்ரக் மகாதேபசாஹி பகுதியை சேர்ந்த கார்த்திக் தாஸ் என்பவரது மகன் கவுதம் தாஸ் (வயது 35) எனபதும், பத்ராக் பகுதியில் இருந்து திருப்பூர் பகுதிக்கு கஞ்சாவை கடத்தி சென்றதும் தெரியவந்தது.

அதைத்தொடர்ந்து அவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர். கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story