மரத்தில் கார் மோதி ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் காயம்
கொல்லுமாங்குடி அருகே மரத்தில் கார் மோதி ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் காயம் அடைந்தனர்.
நன்னிலம்:
கொல்லுமாங்குடி அருகே மரத்தில் கார் மோதி ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் காயம் அடைந்தனர்.
திருநள்ளாறு சென்றனர்
ஈரோட்டை சேர்ந்தவர் கார்த்திக், அவருடைய மனைவி சுகுணா மற்றும் குழந்தைகள் தேசிகா, ரியாத்சாய், கார்த்திக்கின் அக்கா கவிதா, அவருடைய கணவர் ஜோதிகுமார் ஆகிய 6 பேர் நேற்று காலை காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு சனீஸ்வரபகவான் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய காரில் சென்று கொண்டிருந்தனர். காரை கார்த்திக் ஓட்டி சென்றார்.
மரத்தில் மோதியது
திருவாரூர் மாவட்டம் கொல்லுமாங்குடி அருகே நாடாகுடி என்ற இடத்தில் சென்ற போது, எதிரே வந்த இருசக்கர வாகனம் மோதுவது போல் வந்ததால் காரை கார்த்திக் திருப்பி உள்ளார். இதனால் சாலையோரத்தில் உள்ள மரத்தில் கார் மோதியது இதில் காரில் சென்ற 6 பேரும் காயம் அடைந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த பேரளம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து பேரளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.