பிளாஸ்டிக் கழிவுகளை எரித்த 6 பேர் கைது


பிளாஸ்டிக் கழிவுகளை எரித்த 6 பேர் கைது
x
தினத்தந்தி 1 Jan 2023 12:15 AM IST (Updated: 1 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

பிளாஸ்டிக் கழிவுகளை எரித்த 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

தென்காசி

கடையம், ஜன.1-

கடையம் தோரணமலை அருகே காட்டுப்பகுதிக்குள் ஆசிர்வாதபுரத்தைச் சேர்ந்த மோசே ஆசிர்ராஜன் (வயது 37) மற்றும் ரீகன் (39) உள்பட 6 பேர் ஒரு டன் எடையுள்ள பழைய ஒயர் கழிவுகள், சீரியல் லைட் ஒயர்கள், மோட்டார்சைக்கிள்- கார் ஒயர் உள்ளிட்ட பிளாஸ்டிக் கழிவுகளை எரித்து அதில் இருந்த செம்பு உள்ளிட்ட கம்பிகளை எடுத்து விற்பதற்காக தீயிட்டு கொண்டிருந்தனர். இதுபற்றி தகவல் அறிந்த கடையம் போலீசார் விரைந்து சென்று 6 பேரையும் கைது செய்தனர்.

இந்த கழிவுகளை ஏற்றி வருவதற்கு பயன்படுத்தப்பட்ட சரக்கு வேன் உள்ளிட்ட இரண்டு வாகனங்களையும் பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்தனர்.


Next Story