சூதாடிய 6 பேர் கைது
சங்கரன்கோவில்:சூதாடிய 6 பேர் கைது
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் கோமதியாபுரம் முதல் தெருவில் உள்ள தனியார் விடுதியில் சிலர் பணம் வைத்து சூதாடுவதாக சங்கரன்கோவில் டவுன் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சூசை பாண்டியன் மற்றும் போலீசார் சென்று சோதனை நடத்தினர். அப்போது அங்கிருந்து தப்பி ஓட முயன்றவர்களை சுற்றி வளைத்தனர். விசாரணையில், அவர்கள் கயத்தாறை சேர்ந்த பாலையா மகன் சக்திவேல் (வயது 40), சங்கரன்கோவில் என்.ஜி.ஓ காலனியைச் சேர்ந்த சுந்தரவேல் மகன் காளிராஜ் (46), முல்லைநகரை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் பிரபு (44), தளவாய்புரத்தைச் சேர்ந்த முருகேசன் (57), பனவடலிசத்திரத்தைச் சேர்ந்த சத்தியநாதன் மகன் சாலமோன் ராஜா (38), மலையடிகுறிச்சியைச் சேர்ந்த வெள்ளப்பாண்டி மகன் முத்து (45) என்பதும், அவர்கள் பணம் வைத்து சூதாடியதும் தெரியவந்தது. பின்னர் 6 பேரையும் போலீசார் கைது செய்து, 52 சீட்டுகளையும், ரூ.14,030-ஐயும் பறிமுதல் செய்தனர்.