கஞ்சா வைத்திருந்த 6 பேர் கைது


கஞ்சா வைத்திருந்த 6 பேர் கைது
x

கஞ்சா வைத்திருந்த 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

விருதுநகர்

ராஜபாளையம்,

ராஜபாளையம் பகுதியில் பல்வேறு இடங்களில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக தெற்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிைடத்தது. அதன்ேபரில் ராஜபாளையம் அண்ணா நகர் பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரமகாலிங்கம் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது குமரன் தெருவை சேர்ந்த கபிக்குமார் (வயது 20), முத்தன் தெருவை சேர்ந்த முருகன் (21) ஆகிய 2 பேரிடம் இருந்து 25 கிராம் கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்து அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர். அதேபோல சப்-இன்ஸ்பெக்டர் முருகானந்தம் மற்றும் போலீசார் மங்காபுரம் பகுதியில் இருந்து செல்லும் பொழுது முகில் வண்ணம் பிள்ளை தெருவை சேர்ந்த சம்பத்ராஜ் (20), முத்தன் தெருவை சேர்ந்த கணேஷ் குமார் (23) ஆகிய 2 பேரிடம் 25 கிராம் கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அதேபோல பச்சை மடம் மயானம் அருகே சப் இன்ஸ்பெக்டர் முருகராஜ் மற்றும் போலீசார் ரோந்து செல்லும் பொழுது முத்தன் தெருவை சேர்ந்த ராமராஜ் (32), மங்காபுரம் சாவடி தெருவை சேர்ந்த மகாலிங்கம் (20) ஆகிய 2 பேரிடம் இருந்து 30 கிராம் கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.


Related Tags :
Next Story