ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த சிறுவர்கள் உள்பட 6 பேர் கைது
ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த சிறுவர்கள் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
மதுரை
மதுரை ஜெய்ஹிந்த்புரம் போலீசார் ரோந்து சென்றனர். எம்.கே.புரம் ஜானகிநகர் பகுதியில் சென்றபோது அங்கு சந்தேகப்படும்படியாக 5 பேர்கொண்ட கும்பல் பதுங்கியிருப்பதை கண்டனர். உடனே அவர்களை பிடித்து விசாரித்த போது சிந்தாமணி நாகுபிள்ளை தோப்பு பகுதியை சேர்ந்த கணேசன் (வயது 19) மற்றும் 18-வயதிற்குட்பட்ட 4 சிறுவர்கள் என்பதும், அவர்கள் அந்த பகுதியில் கொள்ளையடிக்கும் நோக்கில் பதுங்கியிருந்ததாகவும், 2 கத்திகள், கயிறு, மிளகாய்பொடி பாக்கெட்டுகள் வைத்திருந்ததும் தெரியவந்தது. அதை தொடர்ந்து ஜெய்ஹிந்த்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் 5 பேரையும் கைது செய்தனர்.
அதே போன்று புதூர் கண்மாய்கரை பகுதியில் போலீசார் ரோந்து சென்ற போது அங்கு ஆயுதத்துடன் பதுங்கியிருந்த புதூர் பாண்டியன்நகரை சேர்ந்த பாலசந்தர் (42) என்பவரை கைது செய்தனர்.
Related Tags :
Next Story