சாராயம் விற்ற பெண் உள்பட 6 பேர் கைது


சாராயம் விற்ற பெண் உள்பட 6 பேர் கைது
x

சாராயம் விற்ற பெண் உள்பட 6 பேர் கைது

நாகப்பட்டினம்

சிக்கல்:

கீழ்வேளூர் அருகே சாராயம் விற்ற பெண் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 550 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

ரோந்து பணி

கீழ்வேளூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் மற்றும் போலீசார் கீழ்வேளூர் அருகே ஓர்குடி மெயின் ரோட்டில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஓர்குடி வெட்டாறு பாலம் பகுதியில் சாராயம் விற்ற ஓர்குடி கீழத்தெருவை சேர்ந்த செல்வராஜ் மகன் கார்த்தி (வயது 32) என்பவரை போலீசார் கைது செய்தனர். அதேபோல் கோட்டேரி அய்யனார் கோவில் அருகே சாராயம் விற்ற அதே பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் மகன் தினகரன் (21), பனைமேடு கீழத்தெருவை சேர்ந்த பக்கிரிசாமி மகன் பார்த்திபன் (20), குற்றம்பொருத்தானிருப்பு மாரியம்மன் கோவில் பகுதியில் சாராயம் விற்ற அதே பகுதியை சேர்ந்த தனபாலன் (59), சிக்கல் அய்யனார் கோவில் அருகே சாராயம் விற்ற அதே பகுதியை சேர்ந்த ஜெயவீரபாண்டியன் (43), தெற்காலத்தூர் மெயின்ரோட்டில் சாராயம் விற்ற நாகை, வ.உ.சி. தெருவை சேர்ந்த பாண்டியம்மாள் (53) ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர்.

550 லிட்டர் சாராயம் பறிமுதல்

இதுகுறித்து கீழ்வேளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்ட 6 பேரிடம் இருந்து 550 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story