மது விற்ற 6 பேர் கைது


மது விற்ற 6 பேர் கைது
x

மது விற்ற 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

கரூர்

கரூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மதுபானங்களை கடத்தி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்வதாக மாவட்ட மதுவிலக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நேற்று முன்தினம் சோதனை நடத்தினர். அப்போது கரூர் வீரராக்கியத்தை சேர்ந்த தங்கம்மாள் (வயது 56), கட்டளையை சேர்ந்த கல்யாணி (55), கிருஷ்ணராஜபுரத்தை சேர்ந்த முத்துச்சாமி (70), மாணிக்க புரத்தை சேர்ந்த தங்கவேல் (57), ஆறுமுகம் (63) உள்பட6 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த 40 மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.


Next Story