6 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்


6 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்
x
தினத்தந்தி 17 Feb 2023 12:15 AM IST (Updated: 17 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 6 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்து வந்த சப்-இன்ஸ்பெக்டர் பச்சையப்பன், சமூக நலன் மற்றும் மனித உரிமை பிரிவுக்கும், திருநாவலூர் சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் கீழ்குப்பம் போலீஸ் நிலையத்துக்கும், கள்ளக்குறிச்சி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நந்தகோபால் ரிஷிவந்தியத்துக்கும், மூங்கில்துறைப்பட்டு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பசலைராஜ் திருநாவலூருக்கும், திருக்கோவிலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவச்சந்திரன் மூங்கில்துறைப்பட்டுக்கும், கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் கனகவல்லி கள்ளக்குறிச்சி நகர போலீஸ் நிலையத்துக்கும் இடமாற்றம் செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் உத்தரவிட்டுள்ளார்.


Next Story