நூதன முறையில் பெண்ணிடம் 6 பவுன் சங்கிலி பறிப்பு


நூதன முறையில் பெண்ணிடம் 6 பவுன் சங்கிலி பறிப்பு
x

செஞ்சி அருகே நூதன முறையில் பெண்ணிடம் 6 பவுன் சங்கிலி பறிப்பு மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் கைவரிசை

விழுப்புரம்

செஞ்சி

செஞ்சி தாலுகா காரியமங்கலம் கிராமத்தை சோ்ந்தவர் ரகுராமன் மனைவி ராஜம்(வயது 85). இவரது கணவர் இறந்து விட்டதால் மேல்களவாய் கிராமத்தில் உள்ள தனது மகள் கல்விக்கரசி வீட்டில் தங்கியிருந்து வருகிறார்.

இந்த நிலையில் ராஜம் நேற்று காலை வீட்டுக்கு வெளியே தண்ணீர் தெளித்துக் கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் தண்ணீர் கேட்பது போல் ராஜத்தின் அருகில் சென்று அவரது கழுகத்தில் கிடந்த 6 பவுன் சங்கிலியை பறித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கூச்சல் எழுப்பினார். இ்ந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். ஆனால் அதற்குள் மர்ம நபர்கள் மோட்டார் சைக்கில் அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர். பறிபோன தங்க சங்கிலியின் மதிப்பு ரூ.2 லட்சத்து 80 ஆயிரம் இருக்கும் என கூறப்படுகிறது. இதுகுறித்து ராஜம் கொடுத்த புகாரின் பேரில் செஞ்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து தங்க சங்கிலியை பறித்துச்சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.


Next Story