மொபட்டில் சென்ற பெண்ணிடம் 6 பவுன் சங்கிலி பறிப்பு


மொபட்டில் சென்ற பெண்ணிடம் 6 பவுன் சங்கிலி பறிப்பு
x

மொபட்டில் சென்ற பெண்ணிடம் 6 பவுன் சங்கிலி பறிக்கப்பட்டது.

திருச்சி

திருச்சி:

திருச்சி வயலூர் சாலை அம்மையப்ப நகரை சேர்ந்தவர் சுந்தரி (வயது 40). இவர் நேற்று மாலை தனது வீட்டில் இருந்து மொபட்டில் வயலூர் சாலையில் இருந்து புத்தூர் நோக்கி வந்து கொண்டிருந்தார். அங்குள்ள பெரியார் மாளிகை அருகே வந்தபோது பின்னால் இருசக்கர வாகனத்தில் முககவசம் அணிந்து வந்த 2 மர்ம ஆசாமிகள், சுந்தரி அணிந்திருந்த 6 பவுன் தங்கச்சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பிச்சென்றனர். இதில் நிலைதடுமாறி மொபட்டுடன் கீழே விழுந்த சுந்தரி படுகாயம் அடைந்தார். அந்தவழியாக வந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும் இதுகுறித்த புகாரின்பேரில் திருச்சி அரசு ஆஸ்பத்திரி போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகிறார்கள்.


Next Story