கர்நாடகாவில் இருந்து 110 பஸ்களில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வந்த 6 ஆயிரம் பெண்கள்- பஸ்களுக்கான வாடகை ரூ.1 கோடியே 10 லட்சம் என தகவல்


கர்நாடகாவில் இருந்து  110 பஸ்களில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வந்த 6 ஆயிரம் பெண்கள்- பஸ்களுக்கான வாடகை ரூ.1 கோடியே 10 லட்சம் என தகவல்
x

கர்நாடகா மாநிலம் சிமோகாவிலிருந்து 110 பஸ்களில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு 6 ஆயிரம் பெண்கள் வந்தனர்.

மதுரை


கர்நாடகா மாநிலம் சிமோகாவிலிருந்து 110 பஸ்களில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு 6 ஆயிரம் பெண்கள் வந்தனர்.

பெண் பக்தர்கள்

கர்நாடகா மாநிலம் சிமோகாவில் இருந்து சுமார் 110 பஸ்களில் சுமார் 6 ஆயிரத்து 100 பெண் பக்தர்கள் புறப்பட்டு நேற்று முன்தினம் பழனி வந்தனர். கர்நாடக மாநில முன்னாள் துணை முதல்-மந்திரி ஈசுவரப்பா தலைமையில் அவர்கள் தமிழகத்தில் உள்ள கோவில்களுக்கு சென்று வருகின்றனர்.. அதன்படி பழனியில் இருந்து அவர்கள் அனைவரும் நேற்று காலை செவ்வாடை உடுத்தி, மதுரை மீனாட்சி அம்மனை தரிசிக்க 110 பஸ்களில் வந்தனர்.

பா.ஜ.க. மாநில செய்தி தொடர்பாளர் ராஜரத்தினம் மற்றும் பா.ஜ.க. நிர்வாகிகள் வரவேற்றனர். பின்னர் அவர்கள் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். பின்னர் இரவு திருப்பரங்குன்றத்திற்கு சென்றனர். அங்கு சுமார் 23 மண்டபங்களில் அவர்கள் தங்கி இன்று காலை முருகனை தரிசனம் செய்கிறார்கள்.

தமிழ்நாடு பூர்வீகம்

அதன்பின்னர் ராமேசுவரம் சென்று சுவாமி தரிசனம் செய்து விட்டு, இன்று இரவு மேல்மருவத்தூர் கோவிலுக்கு புறப்படுகிறார்கள். அங்கு நாளை தரிசனம் செய்து விட்டு சொந்த ஊருக்கு புறப்பட்டு செல்கிறார்கள்.

இது குறித்து பா.ஜ.க. மாநில செய்தி தொடர்பாளர் ராஜரத்தினம் கூறும் போது, கர்நாடகாவில் இருந்து பக்தி சுற்றுலா வந்த பெண்கள் தமிழ்நாட்டில் திருவண்ணாமலையை பூர்வீகமாக கொண்டவர்கள். 4 தலைமுறைக்கு முன்பு இவர்கள் அனைவரும் அங்கு வேலைக்கு சென்றவர்கள் அங்கேயே தங்கி விட்டனர்.

ஆனாலும் ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாட்டிற்கு வந்து இங்குள்ள முக்கிய கோவில்களில் தரிசனம் செய்கிறார்கள். இந்தாண்டு கோவிலுக்கு செல்வதை அறிந்து பா.ஜ.க. முன்னாள் துணை முதல்-மந்திரி ஈசுவரப்பா அதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுத்தார். மேலும் அவர்கள் பயணம் செய்வதற்காக கர்நாடகா மாநில பஸ்களை ரூ.1 கோடியே 10 லட்சம் கட்டி வாடகைக்கு எடுத்து இங்கு வந்துள்ளனர்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.


Related Tags :
Next Story