கடத்த முயன்ற 6 டன் ரேஷன் அரிசி பறிமுதல்


கடத்த முயன்ற 6 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
x
தினத்தந்தி 31 July 2023 12:15 AM IST (Updated: 31 July 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

களியக்காவிளை அருகே மீன் ஏற்றிச் செல்லும் டெம்போவில் கேரளாவுக்கு கடத்த முயன்ற 6 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கன்னியாகுமரி

களியக்காவிளை:

களியக்காவிளை அருகே மீன் ஏற்றிச் செல்லும் டெம்போவில் கேரளாவுக்கு கடத்த முயன்ற 6 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

தீவிர சோதனை

தமிழகத்தில் இருந்து எல்லை பகுதியான குமரி மாவட்டம் வழியாக கேரளாவுக்கு அதிகளவில் ரேஷன் அரிசி, மண்எண்ணெய், உள்ளிட்டவை வாகனங்களில் தொடர்ந்து கடத்தப்பட்டு வருகின்றன.

இதை தடுப்பதற்காக உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு கடத்தல் பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.

6 டன் ரேஷன் அரிசி...

இந்தநிலையில் களியக்காவிளை பகுதியில் தனிப்பிரிவு போலீசார் நேற்று தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த பகுதி வழியாக மீன் ஏற்றிச் செல்லும் கூண்டு அமைக்கப்பட்ட டெம்போ ஒன்று வேகமாக வந்தது. அந்த டெம்போவை நிறுத்தும்படி போலீசார் சைகை காட்டினர். ஆனால், டிரைவர் டெம்போவை நிறுத்தால் வேகமாக ஓட்டிச் சென்றார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் தங்களது வாகனத்தில் டெம்போவை பின்தொடர்ந்து விரட்டிச் சென்றனர். மேக்கோடு பகுதிக்கு சென்றதும் போலீசார் விரட்டி வருவதை கண்ட டிரைவர் டெம்போவை சாலையோரத்தில் நிறுத்தி விட்டு தப்யோடி விட்டார்.

இதையடுத்து போலீசார் டெம்போவின் பின் பகுதியில் உள்ள கூண்டை திறந்து பார்த்தனர். அப்போது அதில் சிறு மூடைகளில் 6 டன் ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து டெம்போவுடன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

பின்னர், டெம்போவை களியக்காவிளை போலீஸ் நிலையத்திலும், பரிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசியை விளவங்கோடு வட்ட வழங்கல் அதிகாரிகளிடமும் ஒப்படைத்தனர். விசாரணையில் கேரளாவுக்கு மீன் ஏற்றிச் செல்வதுபோல் ரேஷன் அரிசியை கடத்த முயன்றது தெரியவந்தது.


Next Story