4 பேருக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை


4 பேருக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை
x

சிக்கலில் வீடு புகுந்து 39 பவுன் நகைகள்-ரூ.3 லட்சம் திருடிய வழக்கில் 4 பேருக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நாகை கோர்ட்டு உத்தரவிட்டது.

நாகப்பட்டினம்

சிக்கலில் வீடு புகுந்து 39 பவுன் நகைகள்-ரூ.3 லட்சம் திருடிய வழக்கில் 4 பேருக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நாகை கோர்ட்டு உத்தரவிட்டது.

39 பவுன் நகைகள்-ரூ.3 லட்சம் திருட்டு

நாகை மாவட்டம் சிக்கல் வடக்கு வீதியை சேர்ந்தவர் வேல்ராஜ். வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி நாகலட்சுமி. இவர் கடந்த மார்ச் மாதம் 17-ந்தேதி தனது உறவினர் வீட்டில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வீட்டை பூட்டி விட்டு சென்றார்.

பின்னர் அவா் அன்று இரவு திரும்பி வந்து பார்த்தபோது வீட்டில் இருந்த 39 பவுன் நகைகள், வெள்ளி பொருட்கள், ரூ.3 லட்சம் திருட்டு போயிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

4 பேருக்கு 6 ஆண்டுகள் சிறை

இதுகுறித்து அவர் கீழ்வேளூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார், வழக்குப்பதிவு செய்து நாகையை சேர்ந்த கார்த்தி (வயது 35), சேகர் (51), பிரகாஷ் (31), காளிதாஸ் (49) ஆகிய 4 பேரையும் கைது செய்தனர்.இதுதொடர்பான வழக்கு நாகை 1-ம் எண் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி நாகப்பன் நேற்று தீர்ப்பு கூறினார்.

அந்த தீர்ப்பில், வேல்ராஜ் வீட்டில் நகை-பணம் திருடிய கார்த்தி, சேகர், பிரகாஷ், காளிதாஸ் ஆகிய 4 பேருக்கும் 6 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.இதையடுத்து 4 பேரையும் போலீசார் திருச்சி மத்திய சிறைக்கு கொண்டு சென்றனர்.


Next Story